Sunday, July 7, 2019

பழனியில் முருக பெருமானில் தரிசனத்தில் எது நல்லது ..?இராஜ அலங்காரமா? ஆண்டிக் கோலமா? எது நல்லது!
____________
பழனியில் முருக பெருமானை தரிசிக்க  செல்பவர்கள் ஆண்டிக் கோலத்தில் தரிசனம் கிடைத்தால் ஒருவித குழப்பத்தில் ஆழ்கிறார்கள் நாம் எல்லாவற்றையும் இழந்து இந்தமாதிரி ஆண்டி ஆகிவிடுவோமா.?

 இதை கடவுள் நமக்கு உணர்த்துகிறார் போல என்று என் நண்பர் ஒருவர் என்னிடம் புலம்பி தீர்த்து விட்டார்..நான் படித்து தெரிந்து கொண்டதை அவருக்கு விபரமாக எடுத்து சொன்னேன்..
சரி நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

சித்தர் பெருமானைப் பற்றி அறிந்து கொண்டவர்கள், போகர் சித்தரை பற்றி நன்கு படித்திருப்போம்.

பழனி முருகனின் சிலையை உருவாக்கியது இவர் தான்.

இவர் மனதில், தன் பயிற்சியில் விளைந்த வித்தைகளைக் கொண்டு, ஒரு யோசனை உதித்தது.

நமக்குப்  தெரிந்த சித்த கலைகளை கொண்டு, மனிதர்களுக்கு இறப்பற்ற நிலையை உருவாக்கலாமே என்று நினைத்தார்.

நினைத்ததோடு நிற்காமல் அதற்கான முயற்சி செய்து பயிற்சியிலும் இறங்கினார்.

இதனால், 4,448 மூலிகைளை ஆய்வு செய்தார்.

இந்த மூலிகைக்குள்ளிலிருந்து, உட்படுத்தி அதிலிருந்து 81 பாஷாணங்களை பிரித்தார்.

பின் அந்த 81 பாஷாணங்களிலிருந்து பலவகையான ஆய்வை மேற்கொண்டு, அதிலிருந்து ஒன்பது பாஷாணங்களை பிரித்தெடுத்தார்.

அந்த ஒன்பது பாஷாணங்களையும் மருந்தாக மாற்ற பல வகையான அறிவியலை கையாண்டார்.

ஒருவழியாக மனிதர்களுக்கு இறப்பில்லாத மருந்தை அவர் கண்டறிந்து விட்டார்.

இதை கண்ட மற்ற சித்தர்கள், இது இயற்கைக்கு எதிரானது என்று போகரிடம் கூறினார்கள்.

அதில் உள்ள நியாயத்தை உணர்ந்தார்.

ஆனால் அவருக்கோ தன்னுடைய பல வருட உழைப்பை வீணாக்க மனம் இல்லை.

இதனை அடுத்து, தான் செய்த நவபாஷாணத்தில் சில மாறுதல்களை புகுத்தினார்.

அந்த மாறுதலால் நிகழ்ந்தவைகளைக் கொண்டு, அற்புதமான தண்டாயுதபாணி சிலையை உருவாக்கினார்.

அதுவே இன்று பழனியில் இருக்கிறது. இந்த சிலையில் பல அற்புதமான மருத்துவ ரகசியங்கள் அடங்கியுள்ளன.

பழனி முருகனுக்கு செய்யும் அபிஷேக நீரை அருந்துவதினால், இன்றும் தீராத நோய்யெல்லாம் தீர்ந்து போகிறது.

இதனாலேயே நோயாளிகள் பலர் பழனி கோயிலுக்கு வந்து, அபிஷேக தீர்த்தத்தை பெற்று அருந்துவது வழக்கம்.

இன்னொரு செய்தி:
பழனி முருகன் கோயிலிற்குச் செல்பவர்கள், பொதுவாக இராஜ அலங்காரத்தையே பார்த்து வணங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஏன்? இது சரியா! தவறா!

அறுபடை வீடுகளில் அவதாரங்களாக முருகன் அருள்பாலிக்கிறார்.

அதில் முக்கியமான வீடு பழனி. இதுதான் நமக்கு அஞ்ஞானத்தை விலக்கி மெய்ஞானத்தை தூண்டக்கூடிய இடம்.

முருகன் ஏன் அந்தக் கோலத்தை பூணுகிறார் என்றால், அப்பா, அம்மா என்பது கூட மாயைதான் என்பதை உணர்த்தக்கூடிய இடம் அது.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்கிறோம். அந்த மாதா, பிதா என்பது கூட பொய்தான். அது கூட ஒரு மாயைதான் என்பதை உணர்த்துவதற்காக உருவான அவதாரம்தான் பழனி அவதாரம்.

நீ ஒரு மெய்ஞானியாக இரு, ஓட்டாண்டியாக இரு என்றெல்லாம் அவர் உணர்த்தவில்லை.

ஒன்றுமே இல்லாமல் சாம்பலைப் பூசிக்கொண்டு, கோவணத்தைக் கட்டிக்கொண்டு வந்து நில் என்றெல்லாம் அவர் அந்தக் கோலத்தால் நமக்கு உணர்த்தவில்லை.

தவறான வழியில் செல்வத்தை தேடாதே, பொருளைத் தேடாதே, அப்படி தேடினால் அது உனக்கு நிலைக்காது என்றுதான் அக்கோலத்தால் நமக்கு உணர்த்துகிறார்.

சங்கடங்களை அனுபவித்து, எதுவுமே வேண்டாம் என்று நீ விட்டுவிட்டால் உன்னைத் தேடி எல்லாமே வரும் என்பதுதான் நிர்வாணக் கோலம்.

தண்டு கொண்டு கோவணத்துடன் நிற்கும் அந்தக் கோலம். இதுபோல விட்டுவிட்டால், ராஜவாக நீ இருப்பாய் என்பதை உணர்த்தத்தான் இராஜ அலங்காரம்.

அதனால் இந்த இரண்டு அலங்காரமுமே மிகவும் பிரதானம்.

அதனால், பழனிக்கு போய் முருகன் சாதாரணமாக இருந்ததைப் பார்த்தோம். அது சரியில்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது.

அதாவது பற்றற்று வாழ்தல்,  சாப்பிடு, அளவாகச் சாப்பிடு. அதேநேரம் அறநெறியில் சம்பாதித்துச் சாப்பிடு. இதுதான் முருகன் பழனியில் உணர்த்தக்கூடிய ஐதீகம்.

அதனால் பழனி முருகனை எந்தக் கோலத்தில் பார்த்தாலும் நல்ல பலன்கள் உண்டு.

பழனி முருகனின் ராஜ அலங்காரத்தை பார்த்தால் நல்லது என்றும். ஆண்டிக் கோலத்தில் தரிசிப்பது கஷ்டம் என்றும் சிலர் சொல்வாருண்டு.

ஆனால் இப்படிச் சொல்வது அது  முற்றிலும் தவறு.

இறை தரிசனத்தை பிரித்தெடுத்துப் வகைப்படுத்துவது சரியானதல்ல.

ஏனெனில் நாம் இறைவனை பல தேவைகளுக்காக வேண்டுகிறோம்.

இதில் அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும்.

முற்றும் துறந்தவர்கள், பெரிய பெரிய ஞானிகளெல்லாம் அந்தக் கோலத்தைக் காண ஆர்வமாக இருப்பார்கள்.

நாம சென்ற சமயம், ஒவ்வொரு சமயமும், ஒவ்வொரு அலங்காரத்தை காணும் பேறு கிடைக்கும்.

இதனால் அடுத்தமுறை செல்லும்போது, இதற்கு முன் காணாத அலங்காரத்தை காண ஆசைப்படுவர்.

மற்றபடி, மன குழப்பம் உடையவர்கள் , வழக்கு நடைபெறும் நிலை, தீராத நோய், வாய் பேச இயலாதவர்கள், பேச்சு குறைபாடு உள்ளவர்கள், மன எழுச்சி இல்லாதவர்கள், மன உளைச்சல் உள்ளவர்கள்,
பெண்ணிற்கு கல்யாணம் முடிக்கப் போகிறவர்கள், பத்திரிக்கை அடித்தவர்கள், வீடு வாங்குவது, வீடு கட்டுவது, கிரகப் பிரவேசம் செய்வது, மருத்துவராலும் முடியாதென்ற போன்ற விஷயங்கள் எதுவானாலும்
பழனி முருகனை தரிசிக்க செல்லும் போது எந்த அலங்காரமாக இருந்தாலும், இறைவனை மனதார வழிபட்டு வர எல்லா நலன்களும்  கிட்டுமென்பது உண்மை.

      முருகா சரணம்.!

No comments:

Post a Comment

திருக்கண்டியூர்

*🔯திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்.* *🔯ஸரீ கமலவல்லி நாச்சியார் ஸமேத ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் {ஸ்ரீ கமலநாதப் பெருமாள்...