Tuesday, June 30, 2020

பூவனூர்

Padmavathi Chairmadurai, [27.06.20 10:26]
*🚩🔔274 தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்🌙🔱*

*265. திருஅச்சிறுபாக்கம் (அச்சரப்பாக்கம்)*

*சிவஸ்தலம் பெயர்*

*திருஅச்சிறுபாக்கம் (அச்சரப்பாக்கம்)*

*இறைவன் பெயர்*

*பார்க்கபுரீஸ்வரர், ஆட்சீஸ்வரர், ஆட்சிகொண்டநாதர், ஸ்திரவாசபுரீஸ்வரர், முல்லைக்கானமுடையார்*

*இறைவி பெயர்*

*இளங்கிளியம்மை, சுந்தரநாயகி, பாலசுகாம்பிகை, அதிசுந்தரமின்னாள்*

*தேவாரப் பாடல்கள்*

*சம்பந்தர்*

*பொன்றிரண் டன்ன புரிசடை*

*எப்படிப் போவது*

*அச்சிறுபாக்கம் ரயில் நிலையம் சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. அச்சிறுபாக்கம் சிறிய ரயில் நிலையம் ஆனதால் அநேக ரயில்கள் இங்கு நிற்பதில்லை. ஆகையால் அச்சிறுபாக்கத்திறகு முந்தைய ரயில் நிலையமான மேல்மருவத்தூரில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில சுமார் 4 கி.மி. பயணம் செய்தால் அச்சிறுபாக்கம் கோவிலை அடையலாம். சென்னையில் இருந்து செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர் வழியாக திண்டிவனம் செல்லும் சாலையில் மேல்மருவத்தூரை அடுத்து வரும் நிறுத்தம் அச்சிறுபாக்கம். அங்கு இறங்கி இடப்பக்கம் பிரியும் ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் அரை கி.மி. சென்றால் கோவிலை அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 96 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது.*

*ஆலய முகவரி*

*அருள்மிகு ஆட்சீஸ்வரர் சுவாமி *திருக்கோவில்*
*அச்சிறுபாக்கம் அஞ்சல்*
*மதுராந்தகம் வட்டம்*
*காஞ்சீபுரம் மாவட்டம்*
*PIN - 603301*
*தொடர்பு: 044 – 27523019, 9842309534*
*இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் 11-30 மணி வரையிலும் மாலையில் 4-30 மணி முதல் 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.*

*தல வரலாறு*

*மக்கள் வழக்கில் அச்சரப்பாக்கம் என்று வழங்குகிறது.*

*விநாயகரை வணங்காது, திரிபுரம் எரிக்கச் சென்ற இறைவனுடைய தேர் அச்சு முறிந்த இடம் (அச்சு + இறு + பாக்கம்) ஆதலின் இப்பெயர் பெற்றது. இறைவன் இத்தலத்தில் விநாயகருக்கு அருள் புரிந்து, தொடர்ந்து சென்று திருவதிகையில் அசுரரை (திரிபுராதிகளை) வென்றதாக வரலாறு.*

*முன்பொருமுறை இவ்வூர் வழியே சென்ற பாண்டிய மன்னன் ஒருவன் காட்டு முல்லைக் கொடிகள் சூழ்ந்த காட்டைக் கண்டான். பொன்நிறமான உடும்பு ஒன்று ஓடுவது கண்டு அவன் துரத்திச் செல்ல அது ஓடிச்சென்று சரக்கொன்றை மரத்தின் பொந்தில் புகுந்து கொண்டது. அரசன் ஆணைப்படி ஏவலர்கள் அம்மரத்தை வெட்ட, குருதி வெளிப்பட, தோண்டுகையில் சிவலிங்கம் வெளிப்பட்டது. வெட்டிய தழும்புப்பட்ட இறைவனுக்கு, அரசன் "திரிநேத்திரதாரி " என்னும் முனிவரிடம் செல்வத்தைத் தந்து கோயில் கட்டச் செய்தான். அவரும், தன்னையும், மன்னனையும் ஆட்கொண்ட இறைவனுக்கு, இரு கருவறைகள் கொண்ட இக்கோயிலைக் கட்டினார். கோயிலைக் கண்ட மன்னன் இரு சந்நிதிகள் அமைந்திருப்பது கண்டு முனிவரைக் கேட்க, அவர் அரசே! உம்மை ஆட்கொண்டவர் "உமையாட்சீஸ்வரர் "; எமையாட்கொண்டவர் "ஆட்சீஸ்வரர் " என்று மறுமொழி தந்ததாக வரலாறு கூறுகின்றது. (உமையாட்சீஸ்வரர் சந்நிதி, வாயிலுக்கு நேரே உள் அடங்கி, பிராகாரத்தில் உள்ளது.)*

*தல வரலாறு: வித்யுந்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரர்கள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். ஆனால் அவ்வாறு புறப்படுவதற்கு முன்பு முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்க தேவர்கள் மறந்தனர். அதனால் தேரின் அச்சை விநாயகர் முறித்து விட்டார். தேர் அச்சு முறிந்ததற்குக் காரணம் விநாயகர் தான் என்பதை உணர்ந்த சிவன் அவரை வேண்டினார். தந்தை சொல் கேட்ட விநாயகர் தேரின் அச்சை சரியாக்கினார். அதன் பின் சிவபெருமான் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு இற்று (முறிந்து) நின்ற இடமாதலால் இத்தலம் அச்சு இறு பாக்கம் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி தற்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கப்படுகிறது.*

*கோவில் அமைப்பு: இவ்வாலயம் 5 நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நேரே உள் வாயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்தவுடன் நேராக இல்லாமல் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை சற்று இடதுபுறம் வடக்கே அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் இங்குள்ள இரண்டு மூலவர்கள் சந்நிதியாகும். கோபுர வாயிலுக்கு நேரே உள்ள உள் வாயில் வழியாகச் சென்றால் நேர் எதிரே உமையாட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது. உள் வாயில் நுழைந்தவடன் சற்

Padmavathi Chairmadurai, [27.06.20 10:26]
[ Photo ]

Padmavathi Chairmadurai, [27.06.20 10:40]
#ஆலயதரிசனம்...

பூவனூர்
ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் ஆலயம்..

‘பூவனூர் புகுவார் வினை போகுமே’ என திருநாவுக்கரசரால் போற்றப்பட்ட திருத்தலம்,

திருப்பூவனூர்  ஸ்ரீசதுரங்க வல்லபநாதர் திருக்கோயில். திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலம் திருப்பூவனூர், நீடாமங்கலம்- மன்னார்குடி சாலையில்,  சுமார் 5 கி.மீ. தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது

இறைவன்..
சுயம்புலிங்கமாக அருள்மிகு சதுரங்கவல்லபேசுவரர், புஷ்பவனநாதர்

இறைவி..
கற்பகவல்லி, இராஜராஜேஸ்வரி என இரு அம்மன் சன்னதிகள் உள்ளன.

தீர்த்தங்கள்..
ஷீரபுஷ்கரணி .

மைசூர் நந்திமலையில் உள்ளது போல் தனிச்சன்னதி கொண்டு ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் அருள்பாலிக்கும் தலம் திருப்பூவனூர் ஸ்ரீபுஷ்பவன நாதர் கோவில் ஆகும்.

இரு அம்பிகையர் அபூர்வமாய் எழுந்தருளும் தொன்மையான பூவனூர் சிவாலயத்தில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் சூலமேந்திய கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

நவராத்திரி உற்சவத்தலமாய் சித்தர்கள் போற்றுவதால் கலியுக மகான்கள் ஸ்ரீ போதேந்திர சுவாமிகள், ஸ்ரீதர அய்யாவாள், மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் பூஜித்த தலம்.

இது தேவாரப்பாடல்  பெற்ற 103வது திருத்தலமாகும். இத்தலம் சிவபெருமான் சதுரங்க விளையாட்டை (செஸ்) தம் திருவிளையாட்டாய் உமாதேவியருடன் ஆடித்திருவருளைப் பொழிந்த தலமாகும். இதனால் சுவாமியின் திருநாமம் ஸ்ரீசதுரங்க வல்லபநாதர். சதுரங்கத்தில் 64 சதுர கட்டங்களானது இறைவனின் 64 வடிவங்களையும் 64 நாட்டிய நிலைகளையும் குறிப்பது என்பதனை அம்பிகை மூலம் ஈஸ்வரன் நேரிடையாக புலப்பித்த தலம்.

64 விதமான கனிகள், காய்கள், பூக்கள், தான்ய திரவியங்கள், மூலிகை சமித்துக்கள் கொண்டு பஞ்சசக்திகளால் மகரிஷிகள் ஒவ்வொரு மாத நவராத்திரி உற்சவத்தை கொண்டாடிய தலம்.

கலியுகத்தில் அம்பிகை மானுடப்பெண்ணாக ஆதிபராசக்தி அம்சங்களோடு திருநெல்வேலியை ஆண்ட வசுசேனன் எனும் மன்னனின் மகளாக அவதரித்து ராஜராஜேஸ்வரி என்ற திருநாமத்துடன் ஆயகலைகள் அறுபத்து நான்கினும் தேர்ந்தவளாய், குறிப்பாக சதுரங்க ஆட்டத்தில் வல்லவளாய்த் திகழ்ந்து வந்து, தன்னை சதுரங்க ஆட்டத்தில் வெல்பவரையே மணப்பேன் என்ற வைராக்கியத்துடன் இருந்தாள். அம்பிகையை சதுரங்கத்தில் வெல்ல எவராலும் இயலாமல் போகவே மன்னன் மகளின் திருமண பாக்கியத்திற்காக வேண்டி பல தலங்களை வழிபாடு செய்து பூவனூர் வந்தடைந்தான்.

பூவனூர் தலத்தில் சர்வேஸ்வரனாம் சிவபெருமாள் நரை, திரை மூப்புடைய பழுத்த முதியவர் வேடத்தில் வந்து இளவரசியோடு சதுரங்கம் ஆடினார். இப்போட்டி நடைபெற்றது அமாவாசை நாளுக்கு பிறகு வரும் 9 நாட்களும், மாதாந்திர நவராத்திரி காலமாகும். இறுதியில் விஜயதசமி திருநாளில் இறைவன் அம்பிகையை சதுரங்கத்தில் வென்று திருமணம் புரிந்து கொண்டார்.

மானுடராய் பூவனூருக்கு வந்த சிவன், பார்வதி மூர்த்திகளின் தெய்வ திருமணத்தை தரிசிக்க எண்ணற்ற சித்தர்களும், மகரிஷிகளும் குழுமி இருக்க சர்வேஸ்வரன் நடனகோலத்தில் காட்சி தந்து அருளினார்.

முதியவராக வந்த சர்வேஸ்வரனை சிவனடியார்களுக்கும், மன்னனுக்கும் உணர்த்தியவர் மங்கள புஷ்ப நந்தீஸ்வரர் கயிலாயத்தில் மங்களகிரி, புஷ்பகிரியில் உள்ளது போலவே இந்திராதி தேவர்கள் பூவனூரில் வடிவமைத்த அழகியதும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நறுமணப் புஷ்பச்செடி கொடிகளையும் 108 நந்தவனங்களை கொண்டிருந்தமையால் இத்தலத்தில்தான் முதன் முதலில் மங்கள புஷ்ப நந்தீஸ்வரர் தோன்றினார்.

இத்தலத்தில் ஈஸ்வரன் தன் திருமணத்தில் நடனக்கோலத்தை அருளியமையால், சோமஸ்கந்தர் சன்னதி விளங்குவதற்கு இறைவனே மனமுவந்து அளித்துள்ள சங்கல்பவரம் காரணமாகும். இறைவன் திருவருளால் சோமஸ்கந்தர் சன்னதி முன்னால் அபூர்வமாய் ஒரு நந்தீஸ்வரர் காட்சி தருகின்றார்.

சோமஸ்கந்தர் சன்னதி முன் நந்தீஸ்வரர் அருள்வது மிக அபூர்வம். இந்த நந்தீஸ்வரர் தான் மங்கள புஷ்ப நந்தீஸ்வரரின் அம்சமாக மகரிஷிகளால் புலப்படுத்தப்பெற்றவர்.

மானுடப் பெண்ணாய் பூமியில் தோன்றிய அம்பிகை இத்தலத்தில் ஸ்ரீராஜராஜேஸ்வரி தேவியாய் இறைக்கட்டளையால் அருள்கின்றாள்.

நவராத்திரியில் ஸ்ரீராஜராஜேஸ்வரி என்ற பெயரில் உமையவள் அருளும் கோவில்களில் நவராத்திரி விஜயதசமி பூஜைகளை தக்க விரதத்துடன் கொண்டாடுதல் மகளிர் குலத்திற்கு பன்மடங்கு பலன்களை நல்குவதோடு, இதில் பங்கேற்பதும் வாழ்வில் கிடைத்தற்கரிய அற்புதப்பேறு ஆகும்.

வழிபாடுகளை பூவனூர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் கோவிலில் நிகழ்த்திக்கொண்டு உத்தமமான பலன்களை அடைந்து கொள்ளவும், வாழ்க்கையை ஆன்மச்செழுமையுடன் வளமையாக்கிக் கொண்டு இறைப்பேரானந்தம் பெறுவதற்கான எளிய மார்க்கமிது.

தக்க வரன் கிடைக்காமல் எங்கே தன் மகள், மகனுக்கு வயதாகிவிடுமோ? என்ற மனக்கவலையுடன் வாழும் பெற்றோர்கள் பூவனூரின் இவ்வரிய திருமண சக்தித்தலத்தில் நவராத்திரி காலத்தில் புனித நீராடி, விரதமிருந்து வழிபட்டு வந்தால் திருமண பிராப்தி விரைவில் பூரணிக்கும்.
ஈஸ்வரன் ஈஸ்வரி இருவருமே மானுட வடிவில் நடந்து வந்து தம் திருப்பாதங்களை பதித்ததலம் பூவனூர்.

மேலும் இருவரும் மானுட கு

Padmavathi Chairmadurai, [27.06.20 10:40]
லம் போலவே தம் திருமணத்தை நிகழ்த்தி கொண்டு சர்வகோடி ஜீவன்களுக்கும் அருளிய தலம். சதுரங்க விளையாட்டில் (செஸ்) ஈடுபாடுள்ளோர் வணங்கி வரவேண்டிய தலம். நவராத்திரி உற்சவத்திற்கு என ஏற்றம் பெறும் பூவனூர் சிவ, சக்தி, விஷ்ணு பூமி அனைத்து அம்பிகைகளும் உரித்தான நவராத்திரி வழிபாடானது குறிப்பாக துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று சக்தி மூர்த்திகளுக்கும, ராதை, சாவித்திரி சேர்ந்த பஞ்ச மாதேவியருக்கும் ஏற்றதாகும். ஆதிபராசக்தியானவள் மானுடப் பெண்ணாக தோன்றி வளர்ந்து இறைவனை மணந்து இறைவியாய் அருளும் தலத்தில் உள்ள சக்தி மூர்த்தங்களுக்கு நவராத்திரி உற்சவம் ப்ரீதியானது. பூலோகத்தில் ஈஸ்வரன், ஈஸ்வரி முன்னிலையில் நிகழ்த்தப்பெறும் வழிபாடுகளில், வேள்விகளில் தோன்றுவதாய் ஆதிபராசக்தியின் அவதாரங்களில் துணைக்காக வரும் அம்சம் சாமுண்டீஸ்வரியாகும்.

நவராத்திரி வழிபாடு...
இரண்டு அம்பிகையர் உள்ள தலங்களே நவராத்திரி வழிபாட்டுக்கு மிக சிறப்பானது என்பதாலும், நவராத்திரி வழிபாட்டுக்கு மேன்மைதரும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி சன்னதியோடு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் தனிச்சன்னதி கொண்டு விளங்கி வரும் பூவனூர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் ஆலய சாரதா நவராத்திரி உள்ளிட்ட அனைத்து நவராத்திரிகளுக்கும் மிக உகந்ததாகும்.

பூவனூரில் அகஸ்திய மகரிஷியை மூலிகை சித்தராய் வைத்திய லோகத்து சித்புருஷராய் அருளக்காணலாம். பூவுலகில் ஏற்படும் பாம்பு, தேள், நட்டுவாக்கிளி, எலி, நாய், பூனை போன்றவற்றின் விஷக்கடிகளுக்கும் நிவர்த்தி தரும் வைத்திய சாலையாக பூவனூர் விளங்குவதற்கு சிவபெருமானிடமிருந்து நல்வரத்தை அகஸ்தியர் பெற்றுத்தந்துள்ளார்.

இத்தலத்தில்தான் அகஸ்தியர் போகருக்கு விஷக்கடி நிவர்த்திக்கான மூலிகை வைத்திய முறைகளை போதித்துள்ளார். அனைத்து சித்த வைத்தியர்களும் அகஸ்தியருக்கு பூஜை செய்து வழிபட வேண்டிய தலம் இது. ஞாயிற்றுக்கிழமை தோறும் விஷக்கடி நிவர்த்தி செய்ய அகஸ்தியர் பிரானின் ஆசியோடு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதி முன் மூலிகைவேர் ரட்சை கட்டப்பெறுகின்றது.

பூவனூரில் 18–க்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் இருந்து தற்போது 5 தீர்த்தங்கள் நன்கு உள்ளன. கோவிலுக்கு எதிரே உள்ள ஷிர புஷ்கரணியில்தான் (பாற்கடல்) விஷக்கடி நிவர்த்தியாக நீராடி மூலிகை வேர் ரட்சை கட்டப்படுகின்றது.

முற்காலத்தில் மூவாயிரக்கணக்கான மூலிகை புஷ்பச்செடி கொடிகளுடன் நறுமண புஷ்ப சக்திகளுடன் தொடங்கிய இத்தலத்தில் மூலிகை புஷ்பங்கள் நிறைந்து இருந்த காரணத்தால் பூக்களை எடுத்துச் செல்ல சித்தர்கள், மகரிஷிகள், காந்தவர்களின் நடமாட்டம் அதிகம் இருந்துள்ளது.

காசித்தும்பை போன்று புஷ்பகாசி என்ற அரியமூலிகை புஷ்பம் இங்கு விளைந்த காரணத்தால் இத்தலத்திற்கு புஷ்பகாசி என்ற பெயரும் உண்டு. காசிக்கு இணையான தலங்களிலும் காசியின் பெயரை கொண்டுள்ள தலங்களிலும் காஸ்ய மாமுனிவர் தன் தவத்தின் ஊடே வந்து செல்வார் என்பது ஐதீகம்.

புஷ்பகாசி தேவதைகள் புஷ்பங்களை பூவனூரில் இருந்து எடுத்து சென்றுள்ளன. எண்ணற்ற தெய்வீக மகத்துவங்கள் நிறைந்த பூவனூரில் அரிய மூலிகை புஷ்பகதிர்சக்தி நிறைந்துள்ளதால், ஒரு மண்டல காலம் (48 நாட்கள்) இங்கு தங்கி வழிபடுவதும், தீர்த்தங்களில் புனித நீராடுதலும், பிராணயாமம் ஆற்றுதலும், ஆழ்தலும், ஆழ்ந்து சுவாசித்தலும் சிறந்த யோக சக்திகளை, நல்வரங்களை தருவதாம். உடல், உள்ளம், மனம், புத்தி, அறிவு ஐந்துமே மிகத்தூய்மை பெறும்..

அமைவிடம்...
திருப்பூவனூர்  ஸ்ரீசதுரங்க வல்லபநாதர் திருக்கோயில். திருவாரூர் மாவட்டம்
நீடா மங்கலம் திருப்பூவனூர்,

நீடாமங்கலம்- மன்னார்குடி சாலையில்,  சுமார் 5 கி.மீ. தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது...

திருஅச்சிறுபாக்கம்

*🚩🔔274 தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்🌙🔱*

*265. திருஅச்சிறுபாக்கம் (அச்சரப்பாக்கம்)*

*சிவஸ்தலம் பெயர்*

*திருஅச்சிறுபாக்கம் (அச்சரப்பாக்கம்)*

*இறைவன் பெயர்*

*பார்க்கபுரீஸ்வரர், ஆட்சீஸ்வரர், ஆட்சிகொண்டநாதர், ஸ்திரவாசபுரீஸ்வரர், முல்லைக்கானமுடையார்*

*இறைவி பெயர்*

*இளங்கிளியம்மை, சுந்தரநாயகி, பாலசுகாம்பிகை, அதிசுந்தரமின்னாள்*

*தேவாரப் பாடல்கள்*

*சம்பந்தர்*

*பொன்றிரண் டன்ன புரிசடை*

*எப்படிப் போவது*

*அச்சிறுபாக்கம் ரயில் நிலையம் சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. அச்சிறுபாக்கம் சிறிய ரயில் நிலையம் ஆனதால் அநேக ரயில்கள் இங்கு நிற்பதில்லை. ஆகையால் அச்சிறுபாக்கத்திறகு முந்தைய ரயில் நிலையமான மேல்மருவத்தூரில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில சுமார் 4 கி.மி. பயணம் செய்தால் அச்சிறுபாக்கம் கோவிலை அடையலாம். சென்னையில் இருந்து செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர் வழியாக திண்டிவனம் செல்லும் சாலையில் மேல்மருவத்தூரை அடுத்து வரும் நிறுத்தம் அச்சிறுபாக்கம். அங்கு இறங்கி இடப்பக்கம் பிரியும் ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் அரை கி.மி. சென்றால் கோவிலை அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 96 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது.*

*ஆலய முகவரி*

*அருள்மிகு ஆட்சீஸ்வரர் சுவாமி *திருக்கோவில்*
*அச்சிறுபாக்கம் அஞ்சல்*
*மதுராந்தகம் வட்டம்*
*காஞ்சீபுரம் மாவட்டம்*
*PIN - 603301*
*தொடர்பு: 044 – 27523019, 9842309534*
*இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் 11-30 மணி வரையிலும் மாலையில் 4-30 மணி முதல் 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.*

*தல வரலாறு*

*மக்கள் வழக்கில் அச்சரப்பாக்கம் என்று வழங்குகிறது.*

*விநாயகரை வணங்காது, திரிபுரம் எரிக்கச் சென்ற இறைவனுடைய தேர் அச்சு முறிந்த இடம் (அச்சு + இறு + பாக்கம்) ஆதலின் இப்பெயர் பெற்றது. இறைவன் இத்தலத்தில் விநாயகருக்கு அருள் புரிந்து, தொடர்ந்து சென்று திருவதிகையில் அசுரரை (திரிபுராதிகளை) வென்றதாக வரலாறு.*

*முன்பொருமுறை இவ்வூர் வழியே சென்ற பாண்டிய மன்னன் ஒருவன் காட்டு முல்லைக் கொடிகள் சூழ்ந்த காட்டைக் கண்டான். பொன்நிறமான உடும்பு ஒன்று ஓடுவது கண்டு அவன் துரத்திச் செல்ல அது ஓடிச்சென்று சரக்கொன்றை மரத்தின் பொந்தில் புகுந்து கொண்டது. அரசன் ஆணைப்படி ஏவலர்கள் அம்மரத்தை வெட்ட, குருதி வெளிப்பட, தோண்டுகையில் சிவலிங்கம் வெளிப்பட்டது. வெட்டிய தழும்புப்பட்ட இறைவனுக்கு, அரசன் "திரிநேத்திரதாரி " என்னும் முனிவரிடம் செல்வத்தைத் தந்து கோயில் கட்டச் செய்தான். அவரும், தன்னையும், மன்னனையும் ஆட்கொண்ட இறைவனுக்கு, இரு கருவறைகள் கொண்ட இக்கோயிலைக் கட்டினார். கோயிலைக் கண்ட மன்னன் இரு சந்நிதிகள் அமைந்திருப்பது கண்டு முனிவரைக் கேட்க, அவர் அரசே! உம்மை ஆட்கொண்டவர் "உமையாட்சீஸ்வரர் "; எமையாட்கொண்டவர் "ஆட்சீஸ்வரர் " என்று மறுமொழி தந்ததாக வரலாறு கூறுகின்றது. (உமையாட்சீஸ்வரர் சந்நிதி, வாயிலுக்கு நேரே உள் அடங்கி, பிராகாரத்தில் உள்ளது.)*

*தல வரலாறு: வித்யுந்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரர்கள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். ஆனால் அவ்வாறு புறப்படுவதற்கு முன்பு முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்க தேவர்கள் மறந்தனர். அதனால் தேரின் அச்சை விநாயகர் முறித்து விட்டார். தேர் அச்சு முறிந்ததற்குக் காரணம் விநாயகர் தான் என்பதை உணர்ந்த சிவன் அவரை வேண்டினார். தந்தை சொல் கேட்ட விநாயகர் தேரின் அச்சை சரியாக்கினார். அதன் பின் சிவபெருமான் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு இற்று (முறிந்து) நின்ற இடமாதலால் இத்தலம் அச்சு இறு பாக்கம் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி தற்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கப்படுகிறது.*

*கோவில் அமைப்பு: இவ்வாலயம் 5 நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நேரே உள் வாயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்தவுடன் நேராக இல்லாமல் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை சற்று இடதுபுறம் வடக்கே அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் இங்குள்ள இரண்டு மூலவர்கள் சந்நிதியாகும். கோபுர வாயிலுக்கு நேரே உள்ள உள் வாயில் வழியாகச் சென்றால் நேர் எதிரே உமையாட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது. உள் வாயில் நுழைந்தவடன் சற்

Padmavathi Chairmadurai, [27.06.20 10:26]
று வலதுபுறத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றிற்கு எதிரே உள்ளபடி அமைந்திருக்கும் ஆட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது. இந்த ஆட்சீஸ்வரர் தான் இவ்வாலயத்தின் பிரதான மூலவர். சுயம்பு மூர்த்தியான இவர் லிங்க வடிவில் குட்டையான பாணத்துடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவர் குடியிருக்கும் கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்களாக சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் காணப்படுகின்றனர். தாரகனுக்கு அருகில் விநாயகரும், வித்யுன்மாலிக்கு அருகில் வள்ளி தெய்வானையுன் முருகரும் உள்ளனர். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சினாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். ஆட்சீஸ்வரர் சந்நிதியை சுற்றி வலம் வர வசதி உள்ளது.*

*உள் வாயிலைக் கடந்தவுடன் வலதுபறம் உள்ள ஆட்சீஸ்வரரை தரிசித்துவிட்டு சற்று நேரே மேலும் சென்றால் நாம் உமையாட்சீஸ்வரர் சந்நிதியை அடையலாம். உமையாட்சீஸ்வரர் கருவறை வாயிலில் இருபுறமும் அலமேலுமங்கை, ஸ்ரீனிவாச பெருமாள், பழனிஆண்டவர், உற்சவ மூர்த்திகள், லட்சுமி துர்க்கை சரஸ்வதி, ஆறுமுகசாமி ஆகியோரின் சந்நிதிகள் அழகுற அமைந்துள்ளன. கருவறைக்குள் உமையாட்சீஸ்வரர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் காட்சி தருகிறார். லிங்க உருவின் பின்புறம் பார்வதியுடன் சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். அகத்தியருக்கு தனது கயிலாய திருமணக் காட்சியை காட்டியருளிய தலங்களில் இத்தலமும் ஒன்று. அருகில் தெற்கு நோக்கிய உமையாம்பிகை திருஉருவச் சிலையும் உள்ளது.*

*ஆலயத்தின் வடக்கு வெளிப் பிரகாரத்தில் தலவிருட்சமான சரக்கொன்றை மரம் உள்ளது. சரக்கொன்றை மரத்தின் அடியில் கொன்றையடி ஈஸ்வரர் சந்நிதி உள்ளது. அருகில் நந்திகேஸ்வரரும், சிவனை வணங்கியபடி திரிநேத்ரதாரி முனிவரும் உள்ளனர். பாண்டிய மன்னன் ஒருவனுக்கு இத்தலத்தில் சரக்கோன்றை மரத்தடியில் காட்சியளித்த சிவபெருமான், தனக்கு இவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பச் சொல்ல, மன்னன் அப்போது அங்கு வந்த திரிநேத்ரதாரி முனிவரிடம் ஆலயம் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தான். திரிநேத்ரதாரி முனிவரும், தன்னையும், மன்னனையும் ஆட்கொண்ட இறைவனுக்கு, இரு கருவறைகள் கொண்ட இக்கோயிலைக் கட்டினார். கோயிலைக் கண்ட மன்னன் இரு சந்நிதிகள் அமைந்திருப்பது கண்டு முனிவரை விபரம் கேட்டான். முனிவரும் "அரசரை ஆட்கொண்ட இறைவனுக்காக உமையாட்சீஸ்வரர் சந்நிதியும், தன்னை ஆட்கொண்ட இறைவனுக்கு ஆட்சீஸ்வரர் சந்நிதியும் அமைத்தேன்" என்று மறுமொழி தந்ததாக வரலாறு கூறுகின்றது.*

*வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் இத்தலத்தின் பிரதான அம்பாள் இளங்கிளி அம்மை தனி சந்நிதியில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள்.*

*அச்சுமுறி விநாயகர்: சிவபெருமானின் தேர் அச்சை முறித்த விநாயகர் "அச்சுமுறி விநாயகர்" என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனி சந்நிதியில் மேற்கு நோக்கி அமர்ந்து காட்சி தருகிறார். புதிய செயல்கள் தொடங்குவதற்கு முன் இவ்விநாயகரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை. அருணகிரிநாதர் இவ்விநாயகரை தரிசித்து விட்டு விநாயகர் துதி பாடி பிறகு தான் திருப்புகழ் பாடத் தொடங்கினார் எனபதிலிருந்தே இவ்விநாயகரின் பெருமையை உணரலாம். விநாயகர் துதியில் "முப்புரம் எரி செய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த" என்று தலவரலாற்றைக் குறிப்பிடுகிறார்.*

*சிறப்புகள்*

*பிரமகபால மாலையுடன் பைரவர் காட்சித் தருகிறார்.*

*மூலவர் - ஆட்சீஸ்வரர், சிவலிங்கத் திருமேனி; சுயம்பு மூர்த்தி. தாழ அமைந்த சதுரமான ஆவுடையார். பெருமானுக்கு முன்பு நாம் நின்று வழிபடுமிடத்தில் கீழே கிணறுள்ளதாம். கருங்கற்கள் போட்டு மூடப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் கற்களின் இடுக்கு வழியாகப் பார்த்தால் நீர் இருப்பது நன்கு தெரியுமாம்.*

*கோஷ்ட மூர்த்த சோமாஸ்கந்தருக்குக் கீழே, நாகமொன்று சிவலிங்கத்தை வழிபடுவது, காரைக்காலம்மை தலையால் நடப்பது, கண்ணப்பர் கண்ணைப் பெயர்க்கும்போது இறைவனின் கைவெளிப்பட்டுத் தடுப்பது, ஒரு தலையுடன் இருமான்கள் போன்ற சிற்பங்கள் கண்ணுக்கு விருந்தளிப்பதுடன் மனத்திற்கும் அமைதியைத் தருகின்றனவாக உள்ளன.*

*சித்திரைத் பெருவிழாவில் 11-ஆம் நாள் சுவாமி 'பெரும்பேறு கண்டிகை' கிராமத்திற்கு எழுந்தருளி, அகத்தியருக்குக் காட்சிதரும் ஐதீகம் நடைபெறுகிறது.*

*கருவறைச் சுவரில் நிரம்பக் கல்வெட்டுக்கள் உள்ளன.*

*'மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்துத் தென்பால் தனியூர் அச்சிறுபாக்கம்' என்பது கல்வெட்டுக் குறிப்பு.*

*தொடரும்*

*🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻*

திருக்கண்டியூர்

*🔯திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்.* *🔯ஸரீ கமலவல்லி நாச்சியார் ஸமேத ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் {ஸ்ரீ கமலநாதப் பெருமாள்...