Friday, March 29, 2019

“ஆரூர் தொழுது உய்யலாம்”

#ஆழித்தேர்_27_05_18

1, திருமுறைப் பாடல் பெற்ற சிவத்தலங்களுள் சீர்காழிக்கு அடுத்து அதிகம் பாடல் பெற்ற ஸ்தலம் திருவாரூர்.

2, சோழ மன்னர்களின் தலைநகரங்கள் ஐந்தனுள் மிகவும் தொன்மையானது திருவாரூர் – சங்க காலச் சோழர்களின் தலைநகராகவும் பிற்கால சோழர்களின் தலைநகராகவும் பிற்கால சோழர்கள் முடிசூடிக் கொள்ளுமிடமாகவும் விளங்கிய நகர்.

3, பஞ்சபூதத் ஸ்தலங்களில் பிருதிவித் ஸ்தலம் திருவாரூர். தேவேந்திரன் அமைந்த அயிர் எனும் ஒருவகை நுண்மணலான புற்றில் தானே தோன்றியவர் மூலவர் வன்மீகநாதர். அயிர் எனும் நுண் மணலி உண்டு வாழும் மீன் அயிரை மீன் என்பர். “அயிராவணமே எம் அம்மானே” என்பது அப்பர் அருள் வாக்கு.

4, ஆறு ஆதாரத்தலங்களுள் திருவாரூர் மூலாதாரத் ஸ்தலமானதால் வன்மீகநாதர் இருக்கும் கறுவறை மூலட்டானம் என்றும் பூங்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஆகாசத்தலமான சிதம்பரமும் பிருதிவித் ஸ்தலமான திருவாரூருமே மூலட்டானம் எனப்படும்.

5, காலத்தால் மிகவும் பழைமையான திருக்கோயில் திருவாரூர் கோயில். “திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர்க் கோயிலாக் கொண்ட நாளே” என்பது அப்பரடிகள் அருள் வாக்கு.

6, பிறக்க முக்தி தரும் திருத்தலம் திருவாரூர். “திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்பது சுந்தரர் திருவாக்கு. பிறக்க முக்தி தரும் சிவ கணங்களே இவ்வூர் மக்களாதலால் யமன் வேதனை செய்பவனாக இன்றி சண்டீஸ்வர்ராக அருள்பாலிக்கிறார். “உதித்தவர் உதித்திடா ஆரூர்”

7, நமி நந்தி அடிகள் எனும் சிவனடியார் கனவில் சிவபெருமான் தோன்றி திருவாரூரில் உள்ளவர்கள் எல்லாம் சிவ கணத்தவர்கள் எனக் காட்சி கொடுத்தார். “ஞான மறையோய்! ஆரூரில் பிறந்தாரெல்லாம் நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய்”  என்றருளிச் செய்தார் – பெரிய புராணம்.

8, திருவிடை மருதூர் மகாலிங்க ஸ்வாமிகள் பரிவாரத் ஸ்தலங்களுள் திருவாரூர் சோமாஸ்கந்தர் ஸ்தலமாகத் திகழ்கிறது.

9, பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் திருமலைச் சிறப்பாக கயிலை மலையையும் திருநாட்டுச் சிறப்பாக சோழ நாட்டையும் பாடியவர் திருநகரச் சிறப்பாக திருவாரூரையே பாடியருளியுள்ளார்.

10, ஒரு குலத்துக்கு ஒரு மகன் உள்ளான் என்பதையும் ஓராது ஒரு பசுவின் கன்றுக்காக தன் மகனது உயிரைப் போக்கிய மனு நீதிச் சோழன் ஆண்டது திருவாரூர்.

11, தியாகராஜர் எழுந்தருளி உள்ள ஏழுவிடங்கத் ஸ்தலங்களில் முதன்மையானதும் முக்கியமானதும் திருவாரூர்.

12, பாடல் பெற்ற திருவாரூர் பூங்கோயிலின் உள்ளே அறநெறி,பரவை உண் மண்டளி எனும் இரண்டு பாடல் பெற்ற திருக்கோயில்கள் உள்ளன.

13, நமி நந்தி அடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோயில் திருவாரூர் அறநெறி திருக்கோயிலாகும். இதற்கு அப்பரடிகள் அருளிய பதிகங்கள் இரண்டு.

14, பரவையுண் மண்டலி எனும் கோயில் சுந்தரர் அருளிய பதிகம் பெற்றது. பரவை நாச்சியார் மண்ணால் கோயில் கட்டி வழிபட்ட ஸ்தலம். ஒரு காலத்தில் வருணன் ஏவிய கடலை உண்டமை பற்றி இத்தலத்திற்கு பரவியுண் மண்டலி எனும் பெயர் பெற்றது.

15, திருவாரூர் திருத்தலத்தின் தேரும் திருவிழாவும் திருக்கோயிலும் திருக்குளமும் இவ்வூர்த் தேவாரங்களில் வைத்துப் பாடப் பெற்றுள்ளன.

16, திருவாரூர் திருவாதிரைத் திருவிழாவை அப்பரடிகள் கண்டு வணங்கி அதன் சிறப்பை முத்து விதானம் என்று தொடங்கும் ஒரு தனித் திருப்பதிகத்தினால் சம்பந்த பெருமானுக்குக் கூறியருளியிருக்கிறார்கள்.

17, திருவாரூர் பங்குனி உத்திர விழா நினைவிற்கு வரவே திருவொற்றியூரிலிருந்த சுந்தரமூர்த்தி நாயனார் சூளுறவையும் மறந்து திருவாரூர் புறப்பட்டார் என்று பெரியபுராணம் செப்புகின்றது.

18, திருவாரூர் பூங்கோயில் திருக்கோயிலும் கமலாலயம் திருக்குளமும் செங்கழுநீர் ஓடையும் தனித்தனி ஐந்து வேலிகள் பரப்புடையன.

19, திருவாரூரில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் தேவாசிரிய மண்டபம் எனப்படும். சிவனோடொக்கும் அடியார்கள் உறையும் இடம் தேவாசிரிய மண்டபம். பூங்கோயில் பெருமானும் தேவாசிரிய மண்டப அடியார்களும் ஒன்றே என்பதால் தேவர்களும் அடியார்களை வணங்கிச் செல்வதால் இது தேவாசிரிய மண்டபம் எனப்பட்டது.

20, தேவாசிரிய மண்டபம் சைவத்தைக் காத்த இடம். சுந்தரர் பெருமான் அவதார நோக்கம் நிறைவேறிய இடம். பெரிய புரணத்திற்கு வித்திட்ட இடம். ஆண்டவன் சிறப்பும் அடியார்கள் பெருமையும் விளங்கிய இடம். சிவபெருமான் “தில்லை வாழ் அந்தணர்” என அடியெடுத்துக் கொடுக்க சுந்தர மூர்த்தி ஸ்வமிகள் திருத்தொண்டத் தொகை பாடியருளிய இடம். தியாகராஜப் பெருமான் ஆழித்தேர் விழா முடித்து இங்கு எழுந்தருளி மகாபிஷேகம் கொண்டு செங்கோல் செலுத்துவதால் இது ராஜதானி மண்டபம் எனப்படும்.

21, சுந்தரமூர்த்தி நாயனார் விருத்தாசலத்தில் மணிமுத்தா நதியில் இட்ட பொன்னை மிகப் பெரிய கமலாலயம் எனும் திருக்குளத்தில் இருந்து எடுத்து பரவை நாச்சியார்க்குக் கொடுத்த திருத்தலம் திருவாரூர்.

22, திருவாரூர் திருவீதியில்தான் சுந்தரர் பொருட்டு சிவபெருமான் பரவை நாச்சியாரிடம் இருமுறை நள்ளிரவில் தூது நடந்தான். திருவடிப் போது நாறிய திருவீதி.

23, காஞ்சிபுரத்தில் ஒரு கண் பெற்ற சுந்தரர் மீளா அடிமை என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி மற்றொரு கண் பார்வையும் பெற்றது திருவாரூரில்தான்.

24, நமி நந்தி அடிகள், செருத்துணை நாயனார், தண்டியடிகள் நாயனார், கழற்சிங்க நாயனார், விறன்மிண்ட நாயனார் போன்றோர் திருத்தொண்டு செய்து முத்தி பெற்றதும் திருவாரூரில்தான்.

25, திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் முதலில் திருமாலால் வழிபடப் பெற்று முசுகுந்த சக்ரவர்த்தியால் திருவாரூரில் பிரதிஷ்டை செய்யப் பெற்றவர். இங்கு தியாகராஜர் அஜபா நடன மூர்த்தியாக விளங்குகிறார்.

26, தியாகராஜ மூர்த்தம் சிவ வடிவங்கள் இருபத்தைந்து எனக் கூறும் ஆகமங்களுக்கு அப்பாற்பட்ட்து. “ஆரூரில் கண்ட்டியேன் அயர்ந்தவாறே”என்றும் “ஐயந்தின் அப்புறத்தான்” என்று அப்பரடிகளும் “இன்ன தன்மையன் என்ற்றிவொண்ணா எம்மான்” என்று சுந்தரரும் குறிப்பிடுகின்றனர்.

27, சிவபெருமான் உலகை காத்து உய்விப்பதற்காக ராஜ ராஜேஸ்வர உருவில் ரத்ன சிம்மாசனத்தில் இருபுறமும் வீரவாளுடன் கொழு வீற்றிருக்கும் நிலையே தியாகராஜ திருமேனி அமைப்பு. தியாகராஜர் திருமேனியோடு கொண்டி என்ற பிரிவற்ற சக்தி உள்ளது. இவரும் கொண்டியும் முகம் தவிர முழுத்திருமேனி தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளனர். இவர் மூலாதாரத்திற்கு மேல் உள்ள சுவாதிஷ்டான நிலையை விளங்குபவர். இவருடைய பூஜை முறைகள் சிருங்காரமாக போக மூர்த்தி தொடர்பு கொண்டதாக இருக்கும்.

28, தியாகராஜர் எழுந்தருளி இருக்கும் இடம் தேவ சபை என்றும் இவருக்குத் தென்றல் காற்று வரும் கல் சன்னல் திருச்சாலகம் என்றும் இவர் கொடி தியாகக் கொடி என்றும் இவருடைய தேருக்கு ஆழித்தேர் என்றும் இவரை எழுந்தருளப்பண்ணும் திருவாடு தண்டு மாணிக்கத் தண்டு என்றும் பெயர் பெற்றுள்ளன.

29, திருவாரூர் தியாகராஜர் சந்நிதியில் திரு நந்தித் தேவர் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இவருடைய வழிபாட்டுக் காலங்களில் திரு வந்திக்காப்பு மிக்க விஷேடமானது.

30, தியாகராஜர் முழுதும் மறைக்கப்பட்ட ரகசியத் திருமேனியில் வலது பாத தரிசனம் மார்கழி திருவாதிரையின்று இட்து பாத தரிசனம் பங்குனி உத்திரத்தன்று மட்டுமே கண்டு மகிழலாம்.

31, தியாகராஜர் சந்நிதியில் வலப்பால் ஒரு பீடத்தில் பெட்டகத்தில் வீதி விடங்கராகிய மரகத சிவலிங்கம் உள்ளது. இவருக்குத் தான் நாள்தோறும் காலை மாலை அபிஷேகம் நடைபெரும்.

32, எல்லா சிவாலயங்களின் சாந்நித்யமும் சாயரட்க்ஷை எனப்படும் திருவந்திக் காப்பு நேரத்தில் திருவாரூரில் விளங்குவதாக ஐதீகம் சாயரக்ஷை பூஜையின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூஜிப்பதாக ஐதீகமாதலால் அர்ச்சகர் நீண்ட அங்கி, தலைப்பாகை அணிந்துதான் எதிரில் நின்று பூஜை செய்கிறார்.

33, மற்ற திருக்கோயில்களில் பிரதோஷ காலம் மாலை 4.30 முதல் 6.30. வரை ஆகும். ஆனால் திருவாரூரில் 6.30க்கு சாயரக்ஷை முடிந்த பின்னர்தான் பிரதோஷ பூஜை நடைபெரும். ஆகவே நித்ய சாயரக்ஷை பூஜையே நித்ய பிரதோஷ பூஜையாகும்.

34, ஸ்ரீ தியாகராஜர் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் விருப்பப்படி வைகாசி ஆயில்யம் நண்பகல் திரு அம்பர் மாகாளத்தில் சோமாசி மாறநாயனார் சோமாசி யாகத்திற்கு எழுந்தருளுகிறார். எனவே வைகாசி ஆயில்யம் நாளன்று உச்சிகால பூசை திருவாரூரில் இல்லை.

35, திருவாரூரில் உள்ள தேர் தமிழ்நாட்டில் பெரிய தேர். ஆழித்தேர் என்றே அழைப்பர். “ஆழித்தேர் வித்தகன்” என்றே திருமுறை பேசும். மாசி மாத அஸ்த நாளில் கொடியேற்றி பங்குனி மாத ஆயில்யத்தில் தேரோட்டம் நடைபெறும்.

36, திருவாரூரில் உள்ள பஞ்சமுக வாத்யமும் வாசிக்கப்படும் பாரி நாயனமும் கண்டு மகிழ வேண்டியவர்கள்.

37, வன்மீக நாதரின் சந்நிதியில் நந்தியின் மேற்பரப்பில் உள்ள கல்லில் 27 நட்சத்திரங்களும் இராசிச் சக்கரமும் அமைந்து உள்ளன.

38, அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில் அக்ஷர பீடமுள்ளது. இதில் பீடமும் ஐம்பத்தொரு எழுத்துக்கள் எழுதப் பெற்ற திருவாசியுமே உள்ளன. தியானித்து மகிழ வேண்டியது.

39, திருவாரூரில் உள்ள அம்பாள் கமலாம்பாள். பராசக்தி பீடங்களுள் ஒன்று. நான்கு கரங்களுடன் தாமரை பாசம், அக்கமாலை ஏந்தி இட்து கரத்தைத் தொடை மீது ஊறு ஹஸ்தமாக வைத்துள்ளாள். வாசலில் உச்சிஷ்ட கணபதி உள்ளார். கமலாம்பிகையுடன் உற்சவ மூர்த்தி மனோன்மனி. கமலாம்பாள் ஆடிப்பூர விழா நாயகி. ஆடிப்பூர நாளில் தீர்த்தம் வழங்குவாள். அன்றிரவு அம்பாளுக்கு வெள்ளை சாந்தி மகிழ்வார்கள்.

40, மற்றொரு அம்பாள் கோயில் அல்லியங்கோதை எனப்படும். நீலோத்பலாம்பாள் சந்நிதியாகும். வலக்கரத்தில் நீலோத்பல மலர் ஏந்தி இட்து கரத்தால் தோழி இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் முருகனின் தலையை தொட்டுக்கொண்டிருக்கும் கோலத்தில் நான்கு கரங்கள். இந்த மாதிரி அமைப்பு வேறெங்கும் காணக் கிடையாது.

41, திருவாரூர் திருக்கோயிலில்தான் தருமபுர ஆதீன குரு முதல்வர் ஸ்ரீ ஞான சம்பந்த ஸ்வாமிகள் கமலை ஞானப் பிரகாசரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டு உபதேசம் பெற்று சொக்கலிங்க மூர்த்தி பூஜையினை ஏற்றுக் கொண்டார்கள்.

42, இக்கோயிலில் கமலை ஞானப் பிரகாசருக்குத் தஞ்சை மன்னனும் கிருஷ்ண தேவராயனும் வீதி விடங்கப் பெருமானுக்கும் வன்மீக நாதப் பெருமானுக்கும் ஆராதனைக்காக அளித்த தேவ தானங்கள் இராஜாங்கக் கட்டளை என்ற பெயரோடு விளங்கி வருகின்றன. இது இப்பொழுதும் தருமை ஆதீன நிர்வாகத்திலேயே நடைபெற்று வருகிறது.

43, திருவாரூரில் பூங்கோயில் அமைந்துள்ள முதல் சுற்றில் மூலாதார கணபதி வேறு எங்கும் இல்லாத விதத்தில் காட்சி தருகிறார். ஐந்து தலை பாம்பு சுருண்டு படுத்துக் கிடக்க அதன் நடுவில் தாமரையின் மேல் பாசம் அங்குசம் மோதகம் தந்தத்துடன் நர்த்தன கணபதி காட்சி தருகிறார்.

44, திருவாரூர் திருக்கோயிலில் வீதி விடங்க விநாயகர், ஐங்கலக்காசு விநாயகர், வாதாபி கணபதி, கமலாலயக் குளக்கரையில் மாற்றுரைத்த பிள்ளையார், ஆசை விநாயகர், உச்சிஷ்ட விநாயகர், பொற்கம்ப விநாயகர் முதலியன சிற்பச் சிறப்பாலும் தெய்வீக பக்திச் சிறப்பாலும் சிறப்புற்றவைகள்.

45, திருவாரூர் பூங்கோயிலின் உள்ளே பல்வேறு சிறப்பு சந்நிதிகள் உள்ளன. ஓட்டு தியாகர் கோயிலில்தான், சுந்தர மூர்த்திகளைக் கோயிலுள் போகாதவாறு விறண்மிண்டர் தடுக்க இறைவன் இங்கு வந்து ஆட்கொண்டான்.

46, ஆருர் அறநெறி தனிக்கோயில் அப்பரடிகள் பாடல் பெற்றது. நமி நந்தி அடிகள் வழிபட்டது. கண்டராதித்த சோழ தேவரது மனைவியாகிய செம்பியன் மாதேவி திருப்பணி செய்தது. இக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில் மேற்கு முகமாக உள்ளது.

·       *  பரவையுண்மண்டளி – இது தெற்கு கோபுரத்திற்கு அருகில் உள்ளது. பரவை நாச்சியார் வழிபட்டது. சுந்தரர் பாடப் பெற்றது. கிழக்குப் பார்த்த தனிக்கோயில்.

திருவாரூர் கோயிலில் இரண்டு சண்டேசர் சந்நிதிகள் உள்ளன. எம சண்டர், எமனே சண்டீசராக அமர்ந்துள்ளார், ஆதி சண்டேஸ்வரர்.

ஏராளமான சந்நிதிகள் உள்ளதால் குவித்த கரம் விரிப்பதற்கு வழியே இல்லை என்பதனை மகா வித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை “குவித்தகரம் விரித்தல் செலாக் கோயில்களும் பல உளவால்” என்று புகழ்கிறார்.
#சிதம்பர_ரகசியம்

பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?

இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).

(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே நிரூபித்துக்  காட்டிவிட்டது.
ராமேஸ்வரம் பற்றி அறியாத தகவல்கள்.
****************

1. ராமேஸ்வரத்தில் உள்ள ஜோதிலிங்கம் வீபீணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த லிங்கத்தின் பின்புறம் கற்பூர ஆரத்தி காண்பித்தால் முன்புறம் அந்த ஜோதியை விளக்கின் இளஞ்சிவப்பு நிறத்தை அப்படியே காணலாம். 

2. ராமேஸ்வரம் கோவிலில் உள்ள அதிகார நந்தி வாகனம், விக்கிரகம், உற்சவர் ஆகிய மூன்று சிறப்புகளையும் பெற்று இருப்பது வேறு கோவில்களில் இல்லாத சிறப்பு. அதிலும் இந்த நந்தி வாகனம் முழுவதும் பொன்னாலானது.

3. பஞ்ச மூர்த்திகள் புறப்பாட்டின் பொழுது நந்தி தேவர், சுவாமிக்குப் புறங்காட்டாமல் சுவாமிக்குப் பின்புறமாக சுவாமியை முன்னோக்கியவாறு செல்வது இங்கு மரபு.

4. கோவிலின் முதல் பிரகாரத்தில் 144 விக்கிரகங்களும் இரண்டாம் பிரகாரத்தில் 17 விக்கிரகங்களும் பூஜைக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை தவிர கோவிலில் உள்ள 381 விக்கிரகங்களுக்கும் நாள் தோறும் பூஜை நடத்தப்படுகிறது.

5. வெள்ளிக்கிழமை இரவு மலைவளர்க் காதலி அம்மன் கொலு முடிந்து தங்கப் பல்லக்கில் மூன்றாம் பிரகாரத்தில் பவனி வரும் பொழுது மேல் கோபுர வாசலுக்கு அருகில் உள்ள மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் சிலைக்கு பரிவட்டம் சூட்டும் முறை இன்றும் இருந்து வருகிறது.

6. தாய்லாந்து மன்னர் முடி சூட்டும் பொழுது கங்கை நீரினால் நீராட்டும் சடங்கு ஒன்று அங்கே உள்ளது. இதனைச் செய்பவர்கள் உச்சிக்குடும்பி வைத்துள்ள ஆத்திக மக்கள். இவர்களது முன்னோர்கள் ராமேசுவரத்தில் இருந்து சென்று தாய்லாந்தில் நிலைத்தவர்கள்.

7. பாரத நாட்டின் மிகுந்த புனிதத் தலங்களாக நான்கு தலங்கள் மட்டும் கருதப்படுகின்றன. அவற்றுள் ஒன்று ராம்நாத் என்ற ராமேசுவரம் எஞ்சிய மூன்று தலங்களும் வட நாட்டில் அமைந்து இருப்பன. இவை துவாரகநாத், பத்ரிநாத், கேதாரிநாத் என்ற வைணவத் தலங்கள்.

8. ராமேசுவரம் கோவிலுக்கு திருப்பணிகள் செய்து சேதுபதி மன்னர்களை கவுரவிக்கும் வகையில் சேதுபதி ஈஸ்வரர் என்ற பெயரில் சிறு கோவில் ஒன்று ராமேசுவரம் கோவிலில் உள்ளது. அணுக்க மண்டபத்திற்கு வடமேற்கு மூலையில் இந்தக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

9. ராமேசுவரம் கோவிலின் வழிபாடுகள், விழாக்கள், ஆகியவற்றைக் காலமெல்லாம் சிறப்பாக நடைபெற சேதுபதி மன்னர்கள் தக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

10. விழாக்காலங்களில் இரவு நேரங்களில் கோவிலினை அடுத்த பரந்த வெளிகளில் ராமாயணக் கதையை எளிதாக மக்களுக்கு உணர்த்தும் வகையில் எளிய இனிய ஒயில் ஆட்டக்காரர்களின் நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் முன்பு நடைபெற்று வந்தன. இப்போது அந்த வழக்கம் இல்லை.

11. ராமேசுவரம் கோவிலின் மண்டபங்கள், சன்னநிதிகள் முதலியவை பாண்டிய நாட்டு முறையில் காணப்படுகின்றன. 40 அடிகள் நீளமுள்ள பெருங்கற்களினால் செய்யப்பட்ட உத்திரங்கள் முதலியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

12.செதுக்கி மெருகிடப்பட்ட ஒருவகைக் கருப்புக் கல்லால் கருவறை கட்டப்பட்டுள்ளது.

13. இக்கோவிலுள்ள நந்தி வேலைபாடுமிக்க சுதையினாலான பெரிய உருவமுடையதாகும். இந்நந்தி 23 அடி நீளம், 12 அடி அகலம், 17 அடி உயரம் உடையதாக விளங்குகின்றது.

14.மூன்றாம் பிரகாரத்திலிருக்கும் ராமலிங்கப் பிரதிஷ்டை உருவங்கள் தத்ரூபமாக காட்சியளிக்கின்றன. அவ்வுருவங்கள் உயிருள்ளவை போன்றே விளங்குகின்றன.

15.அனுப்புமண்டபம், சுக்கிர வார மண்டபம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவை விசாலமாகவும் காற்றோட்டம் மிக்கவையாகவும் அமைக்கப்பட்டுள்ளமை தனிச்சிறப்புடையது.

16.கோவிலில் உள்ள உலோகத்தினால் செய்யப் பட்ட குதிரைச்சொக்கர் உருவம் மிகவும் கம்பீரமாக கலைத்திறன் மிக்கதாக காணப்படுகிறது.

17.ராமநாதர் கோவிலிலிருந்து 1903,1905,1915 -ம் ஆண்டுகளில் அரசாங்கத்தார் பல கல்வெட்டுக்களை படியெடுத்து பதிவு செய்துள்ளனர்.

18.அம்பிகை சன்னதியில் உள்ள தூண் ஒன்றின்மீது ``இரணிய கர்ப்பயாஜிவிஜயரகுநாத சேதுபதி கட்டத்தேவர்'' என்ற பொறிக்கப்பட்டுள்ளது.

19.முதல் பிரகாரத்திலிருந்து வெளிவரும் வாயிலில் உள்ள கதவுக்கு மேல்புறமுள்ள ஒருகல்வெட்டில் சைவ ஆகமங்களில் வல்லவரான ராமநாதர் என்ற பெருந்துறவி அழிந்து போன பிரகாரத்தை கட்டினார் என்ற கூறப்படுகின்றது.

20.பள்ளியறையில் உள்ள வெள்ளி ஊஞ்சலின் முன்பக்கம் விஜயரகு நாத சேதுபதிகட்டதேவரால் அளிக்கப்பட்டது என்றும் வெள்ளியின் நிறையும் மதிப்பும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன.

21.முதற்பிரகாரத்தின் வடசுவரில் உள்ள கல்வெட்டில் சகம்1545 (கி.பி.1623) ஆம் ஆண்டில் நடமாளிகை மண்டபம்,அர்த்த மண்டபம் இவற்றை உடையான் சேதுபதி கட்டத்தேவர் மகன் கூத்தன் சேதுபதிகட்டத்தேவர் கட்டியதாக கூறப்பட்டுள்ளது.

22. அம்பிகை சந்நிதியிலுள்ள கொடிமரத்தில் கோபதிப்பர் சகம் 1390 (கி.பி.1468) ஆம் ஆண்டில் அதை நிலைநிறுத்தியதாகக் கூறும் எழுத்துக்கள் காணப்படுகின்றன.

23.ராமநாதர் கருவறை நுழைவாயிலில்உள்ள கன்னடக் கல்வெட்டு ஒன்று ராமநாதருக்கு கவசம் அளிக்கப்பட்டதை கூறுகின்றது.

24.தலம், தீர்த்தம், மூர்த்தி என்ற முப்பெரும் சிறப்புக்களை உடையது ராமேஸ்வரம்.

25. ராமேஸ்வரம் கோவிலின் கருவறையில் ராமநாத சுவாமிக்கும் ஏனைய இறைமேனிகளுக்கும் பூஜை, அபிஷேகம், நைவேத்தியம் ஆகிய தெய்வ கைங்கரியங்களில் பல நூற்றாண்டுகளாக ஈடுபட்டு இருப்பவர்கள் மராட்டிய பிராமணர்கள் ஆவர். இது தமிழக திருக்கோவில்களில் வழிபாட்டு நடை முறைகளுக்கு வேறுபட்ட ஒன்று ஆகும்.

26. ராமேசுவரத்தில் பூஜை செய்யும் மராட்டிய பிராமணர்கள் மொத்தம் 512 பேர் என்பதும் அவர்கள் கி.பி. 14-ம் நூற்றாண்டு முதல் ராமேஸ்வரத்தில் இருந்து வருவதும் தெரிய வருகிறது. இவர்களைப் பண்டாக்கள் என்று மக்கள் குறிப்பிடுகின்றனர்.

27.ராமேஸ்வரம் ராமநாதர் கோவில் ராமபிரானால் எழுப்பப்பட்ட பெருமையுடையது.

28. காசி யாத்திரை சென்றவர்கள், ராமேஸ்வரத்திற்கு சென்று தனுஷ்கோடியில் தீர்த்தமாடி ராமேஸ்வர லிங்கத்தை வழிபட்டால் தான் அக்காசியாத்திரை முழுமை பெறும் என்பது இந்து சமயத்தவரின் கொள்கை- நம்பிக்கை.

29. இத்தலத்து கோவிலில் எழுந்தருளியுள்ள ராமநாதப் பெருமானுக்கு நாள்தோறும் கங்கையிலிருந்து கொண்டுவரப்படும் தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படுவது தனிச்சிறப்புடையது.

30. பாடல் பெற்ற சிவதலங்களுள் இத்தலமும் ஒன்று. இத்தலத்தை திருஞான சம்பந்த சுவாமிகள் இரண்டு திருப்பதிகங்களாலும், திருநாவுக்கரசு சுவாமிகள் ஒரு திருப்பதிகத்தாலும் போற்றிப்பாடியுள்ளனர்.

31. இத்தலத்திற்கு தமிழிலும், வடமொழியிலும் நூல்கள் உண்டு. மிகப்பழைய நூல்களிலெல்லாம் இத்தலம் குறிக்கப்பெற்றுள்ளதால் இதன் பழமைச் சிறப்பு நன்கு விளங்குகின்றது.

32.திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம் இதுவாகும்.

33.ராமேஸ்வரத்திற்கு `கந்தமானதனபர்வதம்' என்ற புராணப்பெயரும் உண்டு.

34. ராமேசுவரம் கோவில் பிரகாரங்களின் மொத்த நீளம் 3850 அடி. இக்காலத்தை போல போக்குவரத்து வசதிகள் இல்லாத அக்காலத்தில் இத்துணை கற்களை கொண்டு ராமேசுவரம் தீவில் இத்திருக்கோவிலை நம் முன்னோர்கள் எவ்வாறு எழுப்பினார்கள் என்பது வியப்பாக உள்ளது.

35. பெர்கூசன் என்னும் அறிஞர், "திராவிடக் கட்டிடக் கலையமைப்பின் சிறப்பை ராமேசுவரம் கோவிலில் முழுமையாக காண முடியும். அதே நேரத்தில் கட்டிடக் கலையின் குறைபாடுகள் உள்ள ஒரு கோவிலை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் அதற்கும் ராமேசுவரம் கோவிலைத்தான் காட்ட முடியும்'' என கூறியுள்ளார்.

36. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட பராக்கிரமபாகு என்ற மன்னன் இக்கோவிலை புதுப்பித்ததாக தெரிய வருகின்றது.

37. சுவாமி விவேகானந்தர் 1897-ம் ஆண்டு ராமேசுவரம் கோவிலுக்கு வருகை தந்து "உண்மை வழிபாடு'' என்னும் பொருள் பற்றி ஓர் அரிய சொற்பொழிவாற்றினார்.

38. ஆனி மாதம் நடைபெறும் பிரதிஷ்டை விழாவும், ஆடிமாதம் நடைபெறும் திருக்கல்யாண விழாவும், மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி விழாவும், ராமேசுவரம் கோவிலில் நடக்கும் மிகவும் சிறப்பான திருவிழாக்களாகும்.

39. தென்பாண்டி நாட்டிலே தேவாரப் பாடல் பெற்ற பதினான்கு திருத்தலங்களுள் ஒன்றாகிய ராமேசுவரத்திற்கு இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை வழிபடுகின்றனர்.

40. ராமநாதபுரம் மாவட்டத்தின் தென்கிழக்கு கோடியில் உள்ள ராமேசுவரம் என்னும் தீவின் வடபாகத்தில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சுமார் 100 மைல் தொலைவிலும், ராமநாதபுரத்திலிருந்து 33 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.

41. இத்தலத்திற்கு `தேவநகரம்' `தேவை' என்னும் திருப்பெயர்களும் உண்டு.

42. கந்தமாதனம், தனுஷ்கோடி, தர்ப்பசயனம் ஆகிய மூன்றும் உள்ளதால் "முக்தி தரும் சக்தி உடைய தலம்'' என்ற சிறப்பை ராமேசுவரம் பெற்றுள்ளது.

43. ராமபிரான் ராமேசுவரத்தில் மட்டுமல்ல வேதாரண்யம், பட்டீசுவரத்திலும் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.

44. ராமேஸ்வர சேதுக்கடல் தீர்த்தம் 2 லட்சம் மைல் சுற்றி, சுழன்று வருவதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

45. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடலின் கீழ் உள்ள மூலிகைகள் கடல் மேல் மட்டத்துக்கு வந்து சேது கரையில் மட்டுமே ஒதுங்குவதையும் விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

46. கயிலாய மலையில் உள்ள மானசரோவர் தீர்த்தமும், சேது தீர்த்தமும் தனுஷ் கோடியில் சங்கமம் ஆவதாக நம் முன்னோர்கள் குறிப்புகள் எழுதி வைத்துள்ளனர்.

47. ராமேசுவரத்துக்கு தீர்த்தமாட வருபவர்கள் அந்த காலத்தில் 36 நாட்கள் தங்கி இருந்து தீர்த்தமாடி செல்வார்கள். அது மெல்ல, மெல்ல குறைந்து தற்போது ராமேசுவரத்துக்கு ஒரே நாளில் சென்று விட்டு வந்து விடுகிறார்கள்.

48. ராமேஸ்வரம் தல யாத்திரையில் முக்கிய அங்கம் வகிக்கும் தேவிபட்டினம். சூரியனாக கருதப்படுகிறது. பாம்பன் பைரவராகவும், ராமேசுவரம் அம்பாளாகவும், தனுஷ்கோடி சேதுவாகவும், திரும்புல்லாணி மகா விஷ்ணுவாகவும், உத்தரகோடி மங்கை நடராசர் ஆகவும் கருதப்படுகிறது.

49. ராமேசுவரம் கோவிலுக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களிலும் நீராடும் போது நிதானமாக நீராட வேண்டும். சில வழிகாட்டிகள் பக்தர்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் நீராட வைத்து விடுகிறார்கள்.

50. ராமேசுவரம் கோவிலில் உள்ள ஒவ்வொரு தீர்த்தத்திலும் ஜீவ சத்துக்கள், மின் காந்த அலைகள் உள்ளன. தீர்த்தம் உங்கள் தலையில் நன்கு பட்டால்தான் அந்த சக்திகளை நீங்கள் முழுமையாக பெற முடியும்.

51. ராமேசுவரம் கோவிலில் ஒரே சங்கினுள் அடுத்தடுத்து இரு சங்குகளை கொண்ட தெய்வீக திரிசங்கு உள்ளது.

52. ராமநாதருக்கு அபிஷேகம் செய்வதற்காகவே இத்தலத்தில் பிரத்யேகமாக 1008 அபிஷேகச் சங்குகள் உள்ளன.

53. ராமேசுவரம் கோவிலில் முழுக்க, முழுக்க மூலிகைகளால் உருவாக்கப்பட்ட புதுமையான ஒரு லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்துக்கு வைணலிங்கம் என்றுபெயர்.

54. ராமேசுவரம் மூலவரை தொட்டு பூஜை செய்யும் உரிமை காஞ்சி பெரியவர், சிருங்கேரி மகா சன்னிதானம்,நேபாள நாட்டு மன்னர் ஆகிய 3 பேருக்கும் மட்டுமே உண்டு.

55. ராமபிரான் சூரிய குலத்தை சேர்ந்தவர். அந்த குலத்தின் நேரடி வாரிசாக நேபாள மன்னர் குடும்பம் கருதப்படுகிறது. எனவே நேபாள மன்னர்களின் குல தெய்வமாக ராமேசுவரம் தலம் திகழ்கிறது.

56. ராமேஸ்வரம் ஆலயத்துக்குள் பூஜை செய்யும் ஒவ்வொருவரும் சிருங்கேரி மகா சன்னிதானத்திடம் சிவாச்சாரிய தீட்சை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

57. ராமேசுவரம் தலத்தில் மனம் உருகி வழிபட்டால் புத்திரபேறு, நாகதோஷம் நிவர்த்தி இரண்டையும் உறுதியாகப் பெறலாம்.

58. ராமேசுவரம் தலம் தோன்றி 10 சதுர்யுகம் ஆகிறது என்கிறது ஒரு குறிப்பு. அதன்படி கணக்கிட்டால் ராமேஸ்வரம் கோவில் தோன்றி சுமார் 4கோடி ஆண்டுகள் ஆகிறது.

59. ராமனுக்கு உதவிய குகன் பற்றி உங்களுக்குத் தெரிந்து இருக்கும். அந்த குகனின் வழித் தோன்றல்கள் தான் சேதுபதி மன்னர்கள் என்று கருதப்படுகிறது.

60. ராமேஸ்வரம் கோவில் கட்டுமானத்துக்கு இலங்கை திரிகோண மலையில் இருந்து பிரமாண்டமான கருங்கற்கள் வெட்டி எடுத்து வரப்பட்டது.

61. 1693-ல் ராமேஸ்வரம் கோவிலை தகர்க்க முயன்றனர். சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் வெகுண்டு எழுந்து ராமேசுவரம் கோவிலை காப்பாற்றினார்கள்.

62. ராமேசுவரம் கோவிலுக்கு அள்ளி, அள்ளி கொடுத்த சேதுபதி மன்னர்களுக்கு ஆண் வாரிசு இல்லாமல் போகும் என்று தாயுமானவர் சாபம்விட்டாராம். எனவே தான் அந்த அரச குடும்பம் பலதடவை வாரிசு இன்றி போனதாக சொல்கிறார்கள்.

63. 1803-ல் சேதுபதிகளின் வாரிசு பலவீனத்தால் ராமேஸ்வரம் ஆலய உரிமையை மன்னர் குடும்பம் இழந்தது. 1853-ல் ஆங்கிலேயர்கள் நிர்வாகத்துக்காக ஒரு குழுவை ஏற்படுத்தினார்கள். பாஸ்கர சேதுபதி மன்னர் லண்டன் பிரிவியூ கவுன்சில் வரை சென்று போராடி 1893-ல் ஆலய உரிமையை மீட்டார்.

64. 1901-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி ஆலய நிர்வாகத்தை ஏ.எல்.ஆர். அருணாச்சலம் செட்டியார் ஏற்றார்.

65. ராமேசுவரம் கோவிலுக்கு ஏராளமான மண்டபங்கள் உள்ளிட்ட திருப்பணிகளை செய்ய வட மாநில கோடீசுவரர்கள் பலர் முன் வந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை செயல் வடிவம் பெறாமல் போய்விட்டது.

66. ராமேஸ்வரம் கோவில் ராஜ கோபுரத்தில் பல தடவை பழுது ஏற்பட்டு சீரமைக்கப்பட்டது.

67. ராமேசுவரம் கோவிலுக்கு 1975-ம் ஆண்டுக்கு பிறகு 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக்கும் கும்பாபிஷேகம் சீராக நடத்தப்படவில்லை.

68. ராமேசுவரம் கோவிலில் 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடுவதால் கோவிலின் பெரும் பகுதி எப்போதும் ஈரமாக மாறி விடுகிறது. சிலர் அதில் வழுக்கி விழுகிறார்கள். இதை தடுக்க மாற்று ஏற்பாடுகள் செய்தால் நல்லது.

69. ராமேசுவரம் ராமநாதரை நேபாள மன்னர்கள் மட்டுமின்றி தாய்லாந்து, மைசூர், திருவிதாங்கூர் மன்னர்களும் வழிபட்டு பலன் பெற்றுள்ளனர்.

70. 1925-ல் ராமேசுவரம் கோவிலில் கடல் அரிப்பு ஏற்பட்டது. அம்பா சமுத்திரத்தில் இருந்து ரூ.25 லட்சம் செலவில் கருங்கற்கள் கொண்டு வந்து கடல் அரிப்பை தடுத்து ஆலயத்தை விரிவுபடுத்தினார்கள்.

71. ஆங்கிலேயர்களில் பெரும்பாலானவர்கள், இந்தியாவிலே மிகச் சிறந்த ஆலயம் என்று ராமேசுவரம் கோவிலை கூறினார்கள்.

72. மத்திய அரசு 1951-ல் இனாம் ஒழிப்பு சட்டம் கொண்டு வந்ததால் ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி சொத்துக்கள் பறி போனது.

74. ராமேஸ்வரம் கோவில் ஆலய நிர்வாகத்தை 1959-ம் ஆண்டு தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறை ஏற்றது.

75. ராமேசுவரம் கோவிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் உண்டியல் வசூல் மிகவும் குறைவாகவே வருகிறது.

76. ராமேசுவரம் கோவிலில் சுமார் 300 பேர் நிரந்தர ஆலய ஊழியர்களாக உள்ளனர்.

77. ராமேசுவரம் கோவிலுக்கு சேதுபதி மன்னர்கள் செய்த சேவையை கவுரவிக்கும் வகையில் அவர்களது பெயர், நட்சத்திரங்கள் இன்றும் மூலவர் முன்பு சங்கல்பத்தில் ஓதப்படுகிறது.

78. ராமேசுவரத்தில் உள்ள ஜோதிலிங்கம், இந்தியாவில் உள்ள ஜோதிலிங்கங்களில் 7-வது லிங்கமாக கருதப்படுகிறது.

79. ராமேசுவரம் தலத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் இன்னும் பதஞ்சலி முனிவரின் ஜீவ சமாதியில் நெய் ஊற்றி விளக்கை எரிய வைத்தால் ராகு-கேது தோஷம் நீங்கும். 80. ராமேசுவரம் கோவிலில் வைணவ ஆலயங்களில் கொடுப்பது போல தீர்த்தம் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

81. நேபாள நாட்டு பக்தர் ஒருவர் ஒரு லட்சம் ருத்ரங்களால் ஆன ருத்ராட்ச பந்தல் ஒன்றை இத்தலத்தில் அனைத்து கொடுத்துள்ளார்.

82. ஐதீகப்படி ராமேசுவரத்தில் வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும்.

83.1935-ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவின் வெள்ளி விழா ஆண்டாகும். அப்போது ராமேசுவரம் கோவில் இந்திய அஞ்சல் தலைகளில் பொறிக்கப் பெற்றது.

84. இதிகாச புராண காலத்திலிருந்தே ராமேசுவரம் புனித பூமி என்று இந்தியா முழுவதும் பேசப்பட்டது.

85. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காலம் தெரியாத காலத்தில் பாடியவற்றைச் சங்க இலக்கியம் என்று தொகுத்தார்கள். அதில் அகநானூறு தனுஷ்கோடி பற்றிப் பேசுகிறது.

86. சேது என்ற சொல்லுக்கே பாலம் என்பதுதான் பொருள். அந்தப் பாலத்தையே ஒரு பாலத்தின் மூலமாக நாம் கடக்கிறோம்.

87. தமிழ்நாட்டில் பிறந்து வாழ்பவர்களை விட வடநாட்டுக்காரர்களே மிகுதியாக ராமேசுவரத்தைத் தரிசிக்கிறார்கள். ஆண்டு தோறும் இங்கு வருவதை ஓர் ஆன்மீகப் பயணமாகவே வடமாநிலத்தவர்கள் எண்ணியுள்ளார்கள்.

88. முத்துப்பேட்டைக்கு அருகில் திருவான்மியூரிலும் ராமன் இலங்கை போகும்போது இறைவனை வணங்கி வழி கேட்டிருக்கிறான். அந்த இடம் திருஉசாத்தானம் என்று அழைக்கப்படுகிறது.

89. காசியிலும், சிதம்பரத்திலும் பத்து மாதம் தங்கிய பலனையும், நைமிசாரண்யம், திருப்பதி, ஸ்ரீபர்வதம், மதுரை, ஸ்ரீரங்கம், திருவானைக்கா, குடந்தை, திருவிடைமருதூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருவாரூர், திருவெண்காடு, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருமுதுகுன்றம், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருக்காளத்தி ஆகிய பகுதிகளில் ஓராண்டு தங்கிய பலனையும் தனுஷ்கோடியில் நீராடி ராமநாதரை வணங்கி மூன்றே நாளில் பெறலாம்.

90.காசியில் இறப்பது முக்தி தரும், பாணலிங்கம் பல திரளும், நர்மதையில் விரதம் இருப்பது முக்தி தரும், பொறாமையால் போர்க்களமாகிய குருசேத்திரத்தில் பிறருக்குத் தானம் செய்வதே முக்தி தரும் அந்த மூன்று பலனையும் ஒன்றாக்கித் தரும் பெருமை ராமேசுவரத்திற்கே உண்டு.

91. இந்திய நாடாளுமன்றத்தின் முதல் சபாநாயகர் சி.வி.மாவ்லங்கர் ராமேசுவரம் கோவில் இந்திய தேசியச் சொத்து எனவும் ஒருமைப்பாட்டுக்கு உதவும் சாதனம் என கூறியதைக் கோவில் குறிப்பேடுகளில் காணலாம்.

92. மண்ணினால் லிங்கம் செய்தாள், சீதை. அதனால் ராமேசுவரத்தில் யாரும் மண்ணை உழுது பயிர் செய்வதே இல்லை.

93. ஆவுடையாராக நிலமே இருக்க பாணலிங்கமாக மட்டுமே இருக்கும். ராமலிங்கத்தைப் போல் இருப்பதால், செக்கை ஆட்டி எண்ணை எடுப்பதும் இவ்வூரில் இல்லை.

94. 1925-ல் முதல் குடமுழுக்கும், 27.2.1948-ல் இரண்டாவது குடமுழுக்கும், 5.2.1975-ல் மூன்றாவது குடமுழுக்கும் நடந்தன.

95. ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடியவுடன் உடம்பில் மின்சக்தி பாய்ந்தது போல் ஒரு சுறுசுறுப்பு உணர்வைப் பெற முடிகிறது.

96. புத்திரகாரகனாகிய குருவுக்குப் பகையான கிரகம் சுக்கிரன். புத்திரஸ்தானத்தில் விரோதமானதாகக் கருதப்படுபவர் சூரியனும் செவ்வாயும் ஆவர். எனவே மகப்பேறு விரும்பியவர்கள் மேற்கூறிய கிரகங்களுக்குரிய ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் நீராடுவது கூடாது என்று விலக்கினார்கள். என்றாலும் சேதுவில் இக்காரணத்திற்காக இந்த நாட்களில் நீராடினால் தவறில்லை என்று கூறப்பட்டுள்ளது.

97. பிரேதத்திற்கு நீர்க்கடன் செய்யாதவன், கருவுற்ற மனைவியை உடையவன் வேறு தீர்த்தங்களில் நீராடுவதற்கு உரிமை இல்லை. ஆனால் சேதுவில் நீராடுவதற்கு இவர்களுக்கு தடையுமில்லை. காரணம் நீர்க்கடனுக்குரிய காசியின் பலனை சேது தரும். மேலும் மகப்பேறு தருவதில் இத்தலம் சிறந்திருக்கிறது.

98. தீர்த்தமே தெய்வமாயிருப்பதால் கடல் நீராட்டிற்கு விதிக்கப்பட்ட திதி, கிழமை, நட்சத்திரம் முதலிய நியமங்களை மீறியும் இங்கே என்றும் எப்போதும் ஆடலாம். பாதி உதயம், முழு உதயம் என்றெல்லாம் பார்க்காமல் நீராடலாம்.

99. பலதீபிகை என்னும் சோதிட நூல் கர்ம நாசத்துக்கு நாகப்பிரதிட்டை செய்வதற்குச் சேது உரியது என்று கூறுகிறது.

100. புத்திரதோஷம் எதுவாயினும் சேதுவில் நீராடினால், மறையும்.

101. காசிக்கு மட்டும் போய் வந்தால் போதாதாம். முதலில் ராமேசுவரம் சென்று நீராடி வணங்கிக் கடலில் மண் எடுத்துக் காசிக்குப் போய், கங்கையில் அதனைக் கொட்டி காசியிலிருந்து மீண்டும் வந்து மறுமுறையும் ராமேசுவரம் போய், காசியிலிருந்து கொண்டு வந்த கங்கை நீரால் ராமநாதருக்கு அபிஷேகம் செய்தால்தான் காசியின் பலன் பூர்த்தியாகக் கிடைக்கும். இந்த மரபு தவறி காசிக்கு மட்டும் போய் வந்தால் பயனில்லை. இதைத்தான் காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது என்ற பழமொழி கூறுகிறது.

102. காசி முக்திக்குச் சிறப்புடையது. அதனால்தான் உயிரை உடனே விட விரும்பாமல் வேறு எதையாவது விட்டுவிட்டு வருகிறார்கள். ராமேசுவரமோ உரிய காலத்தில் முக்தியும் பிற்காலத்தில் போகமும் அருளும் பாக்கியமுடையதாகும்.

103. மிகுந்த சிறப்புடையது ராமேசுவரம் என்றாலும் தனுஷ்கோடிக்குப் போய் விட்டுத்தான் பிறகு ராமேசுவரம் வர வேண்டும்.

104. பாம்பன் நீர் இணைப்பை வில் நாணாகவும் சுற்றிலும் வளைந்த கடல்நீரை வளைந்த வில்லாகவும் கற்பனை செய்தால் அந்த வில்லில் நாண்பூட்டி நிற்கும் அம்புபோலவே ராமேசுவரமும் தனுஷ்கோடியும் நமக்கு ஆகாயத்தில் நின்று பார்க்கும்போது தெரியும்.

105. 1964-ல் அடித்த புயலில் ஓர் ரெயில் தனுஷ்கோடியில் தடம் புரண்டது. ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். இருப்புப் பாதை மண் மூடிப்போனது. ராமேசுவரம் கோவில் அகதிகள் புகலிடமானது. மீனவர்களை தவிர வேறு யாரும் தனுஷ்கோடிக்குப் போய் மீண்டும் வாழ்வதற்கு இன்று வரை துணியவில்லை.

106. நம்பு நாயகியம்மன் என்னும் மாரியம்மன் கோவிலும் முன்பு தனுஷ்கோடியில்தான் இருந்தது. புயல் அழிவுக்குப் பின் நடராஜபுரத்தில் இருக்கிறது. ராமேசுவரத் தில் காவல் தெய்வங்களில் இதுவும் ஒன்று.

107. சித்தப்பிரமை கொண்டோர் சேதுவால் குணம் பெறுவர். 108.ராமேசுவரத்திற்கு பழைய பெயர் கந்தமாதனப் பர்வதம் என்பதே ஆகும். ராமனுக்குப் பின்தான் பெயர் மாறியது.

109. சிவனும் உமாதேவியும் ராமேசுவரத்தில் தினமும் வெளிப்படத் தோன்றியபடியுள்ளனர் என்று சேது தல புராணம் சொல்கிறது.

110. தனுஷ்கோடிக்குப் போனாலும் போகாவிட்டாலும் ராமேசுவரத்தில் உறுதியாக அக்னி தீர்த்திற்க்குப் போய் நீராடாமல் எந்த யாத்திரிகரும் திரும்ப மாட்டார். இன்றைய நிலையில் அக்னி தீர்த்தத்தில் நீராடுவதே நடைமுறையில் அதிகமாகி உள்ளது.

111. 78 அடி உயரமான மேற்குக் கோபுரத்தை சேதுபதிகள் முழுவதும் கருங்கல்லாகவே கட்டி விட்டார்கள். பெரும்பாலும் நிலையும் மேல் தளமும் வரைதான் கருங்கல்லாக இருப்பது வழக்கம். இவர்களோ கலசம் வரை அப்படியே கருங்கல்லாக கட்டியது ஒரு சிறப்பே ஆகும்.

112. கீழ்க் கோபுரம் கட்டிய தேவகோட்டை ஜமீன்தார் ஏ.எல்.ஏ.ஆர். செட்டியார் குடும்பத்தினரும் 128 அடி உயரமாக அதே போல் கருங்கல்லாய்க் கட்டி விட்டார்கள். இக்கீழ்க்கோபுரம் 1649-ல் சேதுபதியால் தொடங்கப்பட்டுக் கைவிடப்பட்டதால், 1879 முதல் 1904-க்குள் ஜமீன்தார் இதைக் கட்டியிருக்கிறார். இலங்கை வடகரையில் நெடுந்தீவில் நின்று பார்த்தால் இக்கோபுரம் தெரியும்.

113. ராமன் நிறுவிய லிங்கம், அனுமன் லிங்கம், விசாலாட்சி, பருவதவர்த்தினி, நடராசர் ஆகிய ஐவர்க்கும் தனி விமானங்கள் உள்ளன. கோவில் பதினைந்து ஏக்கர் பரப்புள்ளது. நீளம் 865 அடியும் அகலம் 657 அடியும் உள்ள கோவில் இதுவாகும். சில உத்திரங்கள் 49 அடி நீளம் உடையவை ஒரே கல்லால் ஆகியவை.

114. வைணவத்தில் கருடசேவையும் சைவத்தில் ரிஷபவாகன காட்சியும் முக்தி தரும் என்பார்கள். அதுவும் கோபுர தரிசனமாகும்போது தான் இக்காட்சிகள் மிகவும் சிறப்புக்குரியதாகக் கருதப்படும். அதற்கு ஏற்ப மண்டப உச்சியில் ரிஷபவாகனக் காட்சியும் பின்புறம் கீழைக் கோபுரம் இருப்பதும் முக்திதரும் தலத்தில் சிறந்த ராமேசுவரத்திற்கு மிகவும் உரியதாய் விளங்குகின்றன.

115. விஜயரகுநாத சேதுபதி (கி.பி. 1711 - 1725) நாள் தோறும் குதிரையில் வந்து ராமேசுவரத்தை வழிபட்ட பிறகே இரவு உணவு உண்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்.

116.ராமேஸ்வரம் பகுதி பாண்டியர். சோழர்கள், சிங்களவர், விஜய நகரமன்னர், மதுரை நாயக்கர்கள், மறவர் சீமை அதிபதிகளான சேதுபதிகள் ஆகிய பல்வேறு அரசுகளின் ஆட்சிப் பகுதியாக இருந்தது.

117.ராமேஸ்வரம் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவு முதலில் மதுரை பாண்டிய மன்னர்களது ஆட்சிப் பகுதிகளாக இருந்தது.

118.கி.பி.பத்தாவது நூற்றாண்டில் பாண்டிய மண்டலத்தைக் கைப்பற்றிய பராந்தக சோழன் ராமேஸ்வரம் திருக்கோவிலில் துலாபாரம் நிகழ்த்தி அவனது நிறைக்குரிய பொன்னைக் கோவிலுக்கு அளித்தான் என்று கி.பி.932-ம் ஆண்டு வேளஞ்சேரி செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

119.மூன்றாம் பிரகாரக் கட்டுமானப் பணியைத் தொடங்கிய வரும் மிகச் சிறந்த சிவத் தொண்டராகவும் விளங்கிய முத்து விசய ரெகுநாத சேதுபதி (கி.பி.1713-1725) திருவாரூர் தச்சர்களைக் கொண்டு அழகிய தேர் ஒன்றை செய்து கோவிலுக்கு வழங்கினார். அதோடு அந்தத்தேர் ஓட்டத்திற்கு வடம் பிடித்து அவரே தொடக்கி வைத்தார்.

120. வைணவரான ராமர் சைவக் கடவுளான ஈஸ்வரனை சிவலிங்க வடிவத்தில் வழிபட்டதால் சைவர்களும் வைணவர்களும் நாடு முழுவதிலும் இருந்து வந்து வழிபடும் முக்கியத் தலமாக உள்ளது ராமேஸ்வரம்.

ஸ்ரீ அழகிய கூத்தர் கோவில், செப்பறை, இராஜவல்லிபுரம், திருநெல்வேலி


திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் தாமிரபரணியின் நதியின் வடகரையில் வடகரையில் அமையப்பெற்றுள்ள அழகிய கிராமம் ராஜவல்லிபுரம். இங்கிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் வயல்வெளிகளுக்கு மத்தியில் அமையப்பெற்றுள்ளது செப்பறை ஸ்ரீ அழகிய கூத்தர் திருக்கோவில்.

திருக்கோவில் வரலாறு:

செப்பறை நடராசர் கோவில் தல வரலாறு

திருநெல்வேலியில் இருந்து சுமார் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது ராஜவல்லிபுரம். இங்கே தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ளது செப்பறை அழகிய கூத்தர் கோயில்.

இந்த தாமிரசபை அமைந்த கதை வெகு சுவாரஸ்யமானது.

சிங்கவர்மன் என்னும் மன்னன் சிதம்பரத்தில் ஸ்தாபிதம் செய்ய ஒரு நடராஜர் மூர்த்தத்தை வடிக்க எண்ணி சோழ நாட்டு சிற்பி நமசிவாயமுத்து என்ற ஸ்தபதியை கூப்பிட்டு அனுப்பினார்.

ஸ்தபதியாரே, தங்களை அழைத்ததற்கு காரணம், ஐந்தொழில் புரியும் எம் ஐயனுக்கு, முக்கண் முதல்வருக்கு, ஆனந்த கூத்தாடும் நடராசருக்கு, பொன்னார் மேனியருக்கு ஒரு அற்புத சிலை வடிக்க வேண்டும், ஆகம விதிப்படி வடிப்பீர்களாக  என்று கட்டளையிட்டான்.

சிற்பி கேட்கின்ற அளவு பொன்னும் பொருளும் என் பொக்கிஷத்திலிருந்து அளிக்கவும், ஐயனின் சிலை அற்புதமாக அமைய வேண்டும் என்றும் அமைச்சரிடம் கூறினான்.

சிற்பி தமது சீடர்களுடன் வேயுறு தோளி பங்கரின் சிலை வார்க்கும் பணியை ஆரம்பித்தார். 

ஒரிரு மாதம் கழித்து,
அரசனும், அமைச்சரும் மற்ற பிரதானிகளும் சிற்பியின் இல்லத்திற்கு செல்கின்றனர்.

அரசன் சிற்பியிடம், "எங்கே என் ஐயன், அம்பலத்தரசரின் அருள் வடிவம் எவ்வாறு வார்த்திருக்கின்றீர்கள். அவரைக் காண இத்தனை நாள் தவம் செய்து கொண்டிருக்கின்றேன். உடனே அவரது எனக்கு தரிசனம் செய்து வையுங்கள், என்று சொன்னான்,

சிற்பி பூஜையறைக்கு அழைத்துச்சென்று அங்கு தான் வடிவமைத்த அம்மையப்பரின் அழகிய திருமூர்த்தத்தை காண்பித்தார்.

பொன்னம்பலவரின் முதல் சிலையைக் கண்ட மன்னன் முகத்தில் திருப்தி இல்லை.

அரசன் அமைச்சரிடம் ! "எம் ஐயன் தேவாதி தேவன், சகல புவனத்தையும், படைத்தும், காத்தும், அழித்தும், அருளியும், மறைத்தும் விளையாடும் முதல்வர், திருக்கயிலை மலையில் ஆனந்த தாண்டவம் ஆடுபவர். அவருக்கு அமைந்த மூர்த்தம் செப்பு சிலையாக அமைந்துள்ளதே என்று கூறி வருத்தப்பட்டான்.

பொன்னம்பலத்தில் நிருத்தியம் செய்யும் என் பொன்னார் மேனியருக்கு பொன்னால் மூர்த்தம் அமைந்தால் தான் பொருத்தமாக இருக்கும் உயர்ந்த சொக்கத் தங்கத்தில் அல்லவா அமைய வேண்டும் புது சிலை செய்ய உத்தரவிடுகின்றேன். அது பசும்பொன் சிலையாக அமையட்டும் என்று அரசன் ஆனையிட்டான்.

சிற்பி பொன்னால் சிற்றம்பலவாணருக்கு இரண்டாவது சிலை வடிக்க ஆரம்பித்தார். சிலைப்பணிகளும் முடிந்தன. ஆனால்..
என்னவென்று தெரியவில்லை. இவ்வளவு பொன் போட்டும் ஐயனின் சிலை மட்டும் செப்பு சிலையாகவே வந்திருக்கின்றது. இது என்ன என்று புரியவில்லை என்று சிற்பி வருந்தினார்.

அமைச்சரும் அது எப்படி சாத்தியம், தாங்கள் பொன் அனைத்தையும் நடன சிகாமணி சிலை வடிக்கத்தானே பயன் படுத்தினீர்கள் என்று கேட்டார்,

சிற்பியும், அமைச்சரிடம், அதில் ஒன்றும் ஐயம் வேண்டாம் அமைச்சரே நான் சரியாகத்தான் வடிவமைத்தேன் என்றார்,

அமைச்சர் தான் அரசரிடம் சென்று அறிவிக்கின்றேன், ஆனால் இராஜ தண்டனைக்கு தாங்கள் தயாராக இருங்கள் என்று கூறி சென்றார்.

சிற்பி மனப்பூர்வமாக அந்த ஆண்டவன் தாள்களையே பற்றி அவரிடம் வேண்டினார். முக்கண் முதல்வரே தாங்கள் உண்மையை அறிவீர்கள் அரசனுக்கு தாங்கள்தான் உண்மையை உணர்த்த வேண்டும் என்று பிரார்த்தித்தார்.

இரண்டாவது சிலையை வந்து பார்த்த மன்னன் அச்சிலையும் செப்புச்சிலையாகவே இருந்ததையும் கண்டு கோபம் கொண்டு, சிற்பியை சிறையிலிட உத்தரவிட்டு சென்று விடுகின்றார். இரவில் மன்னன் கனவில் வார் சடை அண்ணல் தோன்றி “நான் உன் கண்ணுக்கு மட்டுமே தங்கமாக தெரிவேன். மற்றவர்கள் கண்ணுக்கு தாமிர மாகவே தெரிவேன். இதுவே என் விருப்பம்!” எனக்கூறி மறைந்தார்.)

அரசனும், வருந்தி "ஐயனே என்ன மடமை. தங்களின் திருவுள்ளம் இது என்ற உண்மை தெரியாமல் சிற்பியை சிறையிலிட்டுவிட்டேனே. ஆண்டவா! என்னை மன்னித்து விடுங்கள் காலை எழுந்ததும் முதலில் அவரை விடுதலை செய்கின்றேன், என்று வேண்டினான்.

காலை எழுந்தவுடன் அமைச்சரை கூப்பிட்டனுப்பி சிற்பியை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

அரசன, சிற்பியிடம், அடியேன் தான் தவறு செய்து விட்டேன் , இவ்வாறு அமைய வேண்டும் என்பது அந்த ஆண்டவன் திருவுள்ளம். தாங்கள் செய்த அற்புத பணிக்கு இதோ பரிசு பொக்கிஷத்திலிருந்து எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தாங்கள் வடித்த முதல் சிலையையும் தாங்களே எடுத்து செல்லுங்கள் என்று சொன்னான்.

இவ்வாறு நம் ஆர்த்த பிறவி துயர் கெட கூத்தாடும் நடராஜப் பெருமானுக்காக வடிக்கப்பெற்ற இரண்டாவது சிலை சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முதல் சிலை என்னவாயிற்று என்று அறிய ஆவலாக உள்ளதே. நமது இந்தப் பதிவின் கரு அதுதானே அடுத்து அதைக் காண்போம்.

முதலில் செய்த சிலையை மன்னன் இறைவனின் கட்டளைப்படி சிற்பி ஒருவனிடம் கொடுத்துவிட்டான். அவனது கனவில் தோன்றிய சிவன், “இந்தச் சிலையை சுமந்துகொண்டு தெற்கு நோக்கிச் செல்,” எனக்கூறி மறைந்தார். அவரும் அச்சிலையை அவர் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு தென் தமிழ் நாட்டுக்கு சென்றார்.

அதேசமயத்தில் தாமிரபரணியின் வடகரையில் ராஜவல்லிபுரம் கிராமம் உள்ளது. இவ்வூரிலேயே மன்னர் ராமபாண்டியனின் அரண்மனை இருந்தது, அங்கு ஒரு திருவிளையாடலை நடத்தினார். இந்த அரசன், தினமும் திருநெல்வேலியிலுள்ள காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிறகே சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். . ஒருமுறை தாமிரபரணியில் பெரும் வெள்ளம் வந்துவிட்டதால் அவரால் ஆற்றைக் கடக்க அம்மையப்பரை தரிசிக்க முடியவில்லை. அன்று முழுவதும் ராமபாண்டியன் பட்டினியாக இருந்தார். அன்று இரவில் மன்னர் கனவில் நெல்லையப்பர் தோன்றி, “இனிமேல் உன் மாளிகையின் அருகிலேயே நான் கோயில் கொள்ள முடிவு செய்துள்ளேன். சிதம்பரத்திலிருந்து ஒருவன் எனது நடனமாடும் வடிவுடைய விக்ரகத்துடன் வருவான். அந்த விக்ரகத்தை உன் மாளிகையின் அருகில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டு. கோயில் கட்டுமிடத்தின் அருகிலுள்ள குழிக்குள் எறும்புகள் ஊர்ந்துசெல்லும். அந்த இடத்தில் லிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்துவிடு,” என கூறி மறைந்தார்.

இவ்வாறு இறைவன் ஆணையிட்ட அதே சமயம் , சோழ நாட்டு சிற்பியும் முதலில் வடித்த நடராஜரின் விக்ரத்தை சுமந்து கொண்டு இறைவனின் விருப்பப்படி தென் திசை நோக்கி வந்தார். வழியில் ஓரிடத்தில் சிலை மிகவும் கனத்தது. அதற்கு மேல் அவரால் சிலையை சுமக்க முடியவில்லை. எனவே அவர் சிலையை அந்த செப்பறை என்ற இடத்தில் வைத்துவிட்டு, களைப்பினால் தூங்கி விட்டார். கண்விழித்து பார்த்தபோது சிலையை காணவில்லை. அவர் பதைபதைத்து மன்னனிடம் முறையிட்டார்.

ராமபாண்டியன் அதிர்ச்சி யடைந்து சிலையை தேடிச்சென்றார். வேணுவனத்தில் ஓரிடத்தில் சலங்கை ஒலியும், யாரோ நடனமாடும் சப்தமும் கேட்டது மேலும் நல்ல அறிகுறிகளும் தென்பட்டன. அந்த இடத்தில் மன்னர் சென்று பார்த்தபோது நடராஜரின் சிலை இருந்ததைக் கண்டார். ஐயன் கனவில் கூறியபடி அதன் பக்கத்திலேயே ஒரு குழியில் எறும்புகள் ஊர்ந்து சென்று மறைந்து கொண்டிருந்தன. ராமபாண்டியன் மகிழ்வடைந்து லிங்கம் ஒன்றை எறும்புகள் ஊர்ந்த குழியின் மீது பிரதிஷ்டை செய்தார். நடராஜருக்கும் தனி சன்னதி அமைத்தார். அவர் கட்டிய கோயில் வெள்ளத்தால் அழிந்துவிட்டது. அதன்பிறகு ஆரை அழகப்ப முதலியார் என்பவர் இப்போதுள்ள கோயிலைக் கட்டினார். தில்லையில் உள்ளது போலவே இங்கும் நடராஜருக்கு சபை அமைந்துள்ளது ஆனால் இங்கு செப்புத்தகடு வேயப்பட்டுள்ளது.

செப்பறை என்றாலும் தாமிர சபை என்றுதானே பொருள். இவ்வாறு இறைவனின் திருவுள்ளப்படி முதல் விக்ரகம் செப்பறையில் வந்து அமர்ந்தது

நடராஜருக்கும் செப்பு தகடுகளால் வேயப்பட்ட நடன சபை ஒன்றை உருவாக்கி தனி சன்னதி அமைத்தார். இவர் ஸ்ரீ நெல்லையப்பரின் மீது கொண்டிருந்த பக்தியால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்திற்கு ஸ்ரீ நெல்லையப்பர் என்றும், அம்மைக்கு ஸ்ரீ காந்திமதி என்றும் திருநெல்வேலி திருக்கோவிலின் பெயரே வழங்கப்பெற்றது. இங்கு அருள்புரியும் நடராஜரின் திருநாமம் ஸ்ரீ அழகிய கூத்தர்.

 "செப்பறை" பெயர்க்காரணம்:
இங்கு நடராஜர் நடனமாடும் சபை விமானம் செப்பு(செம்பு) தகடுகளால் வேயப்பட்டு அழகுடன் காட்சியளிக்கிறது. எனவே இந்த செப்பு சபைக்கு "செப்பறை" என்ற பெயர் உண்டாகி, பின்னர் அதுவே இந்த கோவிலை குறிக்கும் பெயராக விளங்கிற்று. 

திருக்கோவில் அமைப்பு:

திருக்கோவில் வாயிலை கடந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியோரை தரிசிக்கலாம். பினார் உள்ளே சென்று விநாயகரை தரிசித்து விட்டு கிழக்கு நோக்கி காட்சித்தரும் இறைவன் ஸ்ரீ நெல்லையப்பரை தரிசித்து, இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காட்சித்தரும் அன்னை ஸ்ரீ காந்திமதியையும் தரிசித்து வெளிவந்தால், இறைவன் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் மத்தியில் உள்ள செப்பறை நடன சபையில் அன்னை ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேதராய் ஸ்ரீ அழகிய கூத்தர் பெருமானை தரிசிக்கலாம். பிரகாரத்தில் காட்சிதரும் பரிவார மூர்த்திகளான கன்னி விநாயகர், சுரதேவர், குரு பகவான், வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், ஸ்ரீ சந்தன சபாபதி, பைரவர் ஆகியோரையும் தரிசத்து அருள்பெறும் வகையில் இந்த கோவில் அமையபெற்றுள்ளது.


இங்கு சிதம்பரம் திருக்கோவில் போன்றே மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், திருவாதிரைக்கு முதல் நாள் நடராஜா பெருமான் திருத்தேரில் உலா வருவதை காண கண்கள் கோடி வேண்டும். சிதம்பரம் ஸ்தலத்திற்கு அடுத்தபடியாக இங்கு தான் நடராஜ பெருமானுக்கு என  தனித்தேர் உள்ளது சிறப்பம்சமாகும்.

திருவாதிரை திருநாள் அன்று இங்கு அதிகாலை நடைபெறும் பசு தீபாராதனை சிறப்பு வாய்ந்தது. இதற்காக பக்தர்கள் பலர் முதல் நாளே இங்கு வந்து தங்கி, அதிகாலையில் தாமிரபரணி நதியில் நீராடி தரிசிப்பார்கள். பின்னர் உச்சிக்காலத்தில் நடராஜருக்கு நடன தீபாராதனை வெகு விமரிசையாக நடைபெறும். அப்பொழுது நடராஜ பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகையில், திருவெம்பாவை பாடல் பாட பட்டு தீபாராதனை நடைபெறும். 

திருக்கோவில் செல்லும் வழிமுறை:

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து ராஜவல்லிபுரம் மார்க்கமாக  செல்லும் நகர பேருந்தில் சென்று ராஜவல்லிபுரத்தில் இருந்து ஆட்டோவில் செல்லலாம். திருவாதிரை திருநாள் அன்று மட்டும் சிறப்பு பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து செப்பரைக்கே இயக்கப்படும்.


மன்னனுக்காக அவன் அரண்மனைக்கு அருகிலயே எழுந்தருளி அருள்புரிந்த ஈசன் அருள் நமக்கும் கிட்ட தாமிரபரணியில் நீராடி செப்பறை பிரானை வணங்கி வாழ்வில் வளங்கள் பல பெறுவோமாக..!

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

ஓம் நமசிவாய
#சென்னிமலை_முருகன் கோவில் :

சென்னிமலை ஆண்டவனுக்கு கோயில் கட்டிய #செங்கத்துறையான்!

சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், கொங்கு நாட்டில் மக்கள் பஞ்சம் பிழைக்க ஊர் ஊராக அலைந்த காலம். பத்து வயதுப் குடியானப் பையன் ஒருவன் பசியினால் சோமனூர் அருகில் உள்ள செங்கத்துறை கிராமத்திலிருந்து சென்னிமலைக்கு வந்தான். சென்னிமலை அடிவாரத்தில் உள்ள அய்யம் பாளையம் என்ற கிராமத்துக்குச் சென்று அங்குள்ள பண்ணையார் ஒருவரிடம் வேலை கேட்டான்.
பண்ணையார், ‘‘நீ எந்த ஊர்? உங்கப்பன், ஆத்தா எங்கே இருக்கிறார்கள்?’’ என்று கேட்டார்.
‘‘நான் செங்கத்துறைங்க. யாருமே எனக்கு இல்லீங்க!’’ என்று பதிலளித்தான்.
‘‘ஓகோ... செங்கத்துறையானா!’’ என்று பண்ணையார் கேட்டார். பின்னாளில், செங் கத்துறையான் என்ற பெயர் அவனுக்கு நிலைத்து விட்டது. ‘‘ஊதியமாக மூணு வேளை சோறு மட்டும் போடுவோம்!’’ என்றார் பண்ணையார். அங்கு மாடு மேய்க்கும் வேலையில் சேர்ந்தான்.
காலம் கடந்தது. 25 வயதான செங்கத்துறையான், வெகுளியாக இருந்தான். ஒரு நாள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது சுழல் காற்று ஒன்று பனை மர உயரத்துக்கு வீசி அடித்தது. அது அவனை ஒரு சுழற்றுச் சுழற்றியது. ‘‘ஐயோ, பேய் காத்து வீசுதே... சென்னியாண்டவா, காப்பாத்து!’’ என்றலறினான். அடுத்த கணமே காற்று ஓய்ந்தது. சற்று நேரத்தில் ஓர் அசரீரி: ‘‘ஏய் செங்கத்துறையா! நீ #பசியாறிட்டே... இப்போ #எனக்குப் பசிக்குது!’’
உடனே, ‘‘யார் பேசுறது, பேயா?’’ என்றான்.
‘‘இல்லே. சென்னியாண்டவன்!’’ என்று பதில் வந்தது.
‘‘ஆமா, நீதானே என்னைக் காப்பாத்தினே. முந்தியே சோறு கேட்டிருக்கலாமில்லே... கொடுத் திருப்பேனே!’’ என்றான் செங்கத்துறையான்.
‘‘ஐயோ பசிக்குதே... பசிக்குதே!’’ என்று அசரீரி மீண்டும் மீண்டும் ஒலித்தது.
‘என்ன பண்றது?’ என்று யோசித்த செங்கத்துறையான் கண்ணில், அவன் மந்தையைச் சேர்ந்த #காராம்பசு ஒன்று தென்பட்டது. காராம் பசுவை தெய்வீகப் பசு என்பார்கள். இதன் பாலையே தெய்வங்களுக்கு அபி ஷேகம் செய்வார்கள். செங்கத்துறையான் தனது கலயத்தை நன்றாகக் கழுவி, அந்த காராம்பசுவின் பாலைக் கலயம் நிறையக் கறந்தான். அதை எடுத்துச் சென்று, கிழக்கு திசை நோக்கி நீட்டி, ‘‘சென்னியாண் டவா, #இந்தாபால். வாங்கிக் குடி. உம் பசியெல்லாம் பறந்து போயிடும்!’’ என்று கூறினான்.
‘‘அந்தப் பாறை ஓரமா வெச்சுட்டுப் போ. #குடிச்சுக்கறேன்!’’ என அசரீரி ஒலித்தது.
பாறையின் ஓரம் கலயத்தை வைத்து விட்டு, சாமி எப்படி இருக்கும்னு பார்க்க ஒரு மரத்தின் பின்னால் ஒண்டி, நின்றான். சாமி வரவில்லை. செங்கத் துறையானுக்கு சலிப்பு ஏற்பட் டது. ‘இனி சாமி வராது!’ என்று தீர்மானித்து, கலயத்தை எடுக்கப் போனான். அப்போது கலயத்தில் பால் இல்லை. பதிலாக கமகமவென 
விபூதி #மணத்தது. ‘‘ஹை, நா கொடுத்த பாலை சாமி குடிச்சுட்டுது!’’ என்று ஆடினான்; பாடினான்.
தினமும் சென்னியாண்டவனுக்கு செங்கத்துறையான் பால் கொடுப்பது தொடர்ந்தது. ஒரு நாள், ‘‘ஆமா சாமி... நாள் தவறாம உனக்கு பால் கொடுக்கறேன். ஆனா, நீ எங்கண்ணுக்குத் தெரிய மாட்டேங்கறியே!’’ என்று சலித்துக் கொண் டான். அப்போது, ஒரு மின்னல் மின்னியது. சுழற்காற்று அடித்தது. பாறை மேல் பனை மர உயரத்துக்கு ஓர் ஒளி தோன்றியது. அதில், கையில் வேலுடன் #சென்னியாண்டவர்காட்சி தந்தார். செங்கத்துறையானின் உடம்பு சிலிர்த்தது. நெடுஞ்சாண் கிடையாகத் தரையில் விழுந்து வணங்கினான். ‘‘#நிலத்தம்பிரானே!’’ என்ற குரல் கேட்டு எழுந்து, சுற்றுமுற்றும் பார்த்தான். ‘‘#உன்னைத்தான் கூப்பிட்டேன்!’’ என்று சென்னியாண்டவர் திருவாய் மொழிந்தார்.
‘‘நான் நிலத்தம்பிரான் இல்லே... செங்கத் துறையான், செங்கத்துறையான்!’’ என்று மறுத்தான் அவன்.
சென்னியாண்டவர் தொடர்ந்தார்: ‘‘இன்று முதல் நீ நிலத்தம்பிரான் என்று அழைக்கப்படுவாய். தேவலோகத்தில் வீரபாகு போன்ற நவவீரர் எனக்குத் தொண்டு செய்து, என் தம்பியர் ஆனது போல, நீ பூலோகத்திலிருந்து எனக்குத் தொண்டு செய்ய வேண்டி உள்ளதால், 
#உன்னையும் ஒரு #தம்பியாக ஏற்றுக் கொண்டேன். அதனால்தான் உன்னை நிலத்தம்பிரான் என்றேன். இந்த சிரகிரி மலைமேலே எனக்கு நீ ஒரு கோயில் கட்டு!’’ என்றருளி மறைந்தார்.
செங்கத்துறையான் சிலையென நின்றான். ‘‘சாமி, நானே வயித்துச் சோத்துக்காகப் பாடு படுறேன். என்னால எப்படி உனக்குக் கோயில் கட்ட முடியும்?’’ என்று கேட்டான். அசரீரி சொன்னது. ‘‘செங்கத்துறையானே, #நான்உன்பின்னாலே #இருக்கிறேன்!’’ செங்கத்துறையானுக்கு எதுவும் புரியவில்லை. அன்றிரவு சாப்பிடாமல் படுத்தான். உறக்கம் வரவில்லை. கோயில் கட்டுவது பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்.
காலையில் எழுந்ததும், ‘‘நான் மாடு மேய்க்கப் போக மாட்டேன். சென்னி யாண்டவனுக்குக் கோயில் கட்டப் போறேன்!’’ என்று பண்ணையாரிடம் சொன்னான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். அப்போது, பண்ணையில் வேலை செய்யும் ஒருவனை நான்கு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர். அவர்கள் பண்ணையாரிடம், ‘‘இவனை நாகப் பாம்பு கடிச்சுட்டுது. வைத்தியர் ஊட்டுக்குப் போக வண்டி கேட்க வந்தோமுங்க!’’ என்றனர். ‘‘வண்டியைப் பூட்டிக்கிட்டு சீக்கிரமா கொண்டு போங்க!’’ என்றார் பண்ணையார்.
செங்கத்துறையான் கடகடவெனச் சிரித்தான். ‘‘வைத்தியரைப் பக்கத்திலே வெச்சுக்கிட்டு, பக்கத்து ஊருக்கு வண்டி கட்டிட்டுப் போறீங்களே!’’ என்று சொல்லி விட்டு வெளியே ஓடினான். சற்று நேரத்தில் பச்சிலை மற்றும் ஒரு கொத்து வேப்பிலையுடன் திரும்பி வந்தவனை அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். பாம்புக் கடிபட்டவனை நெருங்கிய செங்கத்துறையான், பச்சிலையைக் கசக்கி அவன் மூக்கருகில் சிறிது நேரம் வைத்திருந்து, வேறு சில தழைகளைக் கசக்கி, அவன் வாயில் சாறை விட்டான். பின்பு வேப்பிலையால் அவன் உடல் முழுவதையும் நீவி விட்டான். சற்று நேரத்தில் பாம்புக் கடிபட்டவன் எழுந்து உட்கார்ந்தான். இந்தக் காட்சியை அனைவரும் ஆச்சரிய மாகப் பார்த்தனர். ‘‘இந்தப் பாம்புப் பாடத்தை, எங்கேடா செங்கத்துறையா படிச்சே?’’ என்றார் பண்ணையார்.
‘‘நான் படிக்கலே... எல்லாமே #சென்னியின் செயல்!’’ என்று சொன்னான் செங்கத்துறையான். ‘சென்னியாண்டவர், செங்கத்துறையான் மீது வந்து #தீராத_நோயை எல்லாம் #தீர்த்து வைக்கிறார்!’ என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியது. ‘‘நானு சென்னி ஆண்டவனுக்குக் கோயில் கட்டப் போறேன்!’’ என்று கூறி விடைபெறுவதற்காகப் பண்ணையாரிடம் சென்றான் செங்கத்துறையான். உடனே வீட்டுக்குள் சென்ற பண்ணையார் பணப்பை ஒன்றுடன் திரும்பி வந்து அதை அவனிடம், சென்னியாண்டவனுக்குக் #காணிக்கையாகக் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட செங்கத்துறையான், ‘‘என்னை சென்னியாண்டவன் ‘நிலத்தம்பிரான்’ என அழைத்தார். அதனால் மற்றவர்களும் அவ்வாறே அழைக்க வேண்டும்!’’ என்று கட்டளையிட்டான். அதன் பிறகு செங்கத்துறையானின் முகத்தில் ஓர் ஒளியும் கருணை யும் தென்பட்டன. அனைவரிடமும் விடைபெற்ற நிலத் தம்பிரான் அங்கிருந்து கிளம்பினார்.
‘சென்னிமலை மீது முருகனுக்குக் கோயில் கட்ட நிதி வேண்டி வருகிறார் நிலத்தம்பிரான்!’ என்ற செய்தி கேட்ட மக்கள், வழிநெடுக நின்று வரவேற்று, தங்களால் இயன்ற பணத்தைக் கொடுத்தனர். பணத்தையெல்லாம் தனது மேல் துண்டால் மூட்டையாகக் கட்டி மலைமேல் சென்னியாண்டவர் முன்னால் வைத்துவிட்டு, பக்கத்தில் உள்ள பாறை மேல் படுத்தார். ‘பணம் கெடச்சுப் போச்சு, மண்டபம் கட்டத் தோதான பாறை இந்த மலையில் இல் லையே?’ என தம்பிரான் பெருமூச்சுவிட்டார். அப்போது மின்னல் மின்னி, இடி இடித்தது. மழை பொழிந்து, வானம் அமைதியானது.
சென்னிமலைக்கு இரண்டு கல் தொலைவில் உள்ள ஒரு பெரிய பாறை மேல் இடி விழுந்து, பாறைகள் பிளந்தன. இந்த விஷயம் மறு நாள் காலையில் நிலத் தம்பிரானுக்குத் தெரிய வந்தது. அந்த இடம் தற்போது ‘#ஒட்டப்பாறை’ என்ற பெயரில் கிராமமாக விளங்குகிறது. அங்கிருந்து எருமைக் கடா பூட்டிய வண்டியில் பாறைகளை ஏற்றிக் கொண்டு வந்து, மலை அடிவாரத்தில் குவித்தார். பிறகு அவற்றை மலைமேல் கொண்டு போக நிலத்தம்பிரான் ஏற்பாடு செய்தார். ஒரு சுபயோக சுப தினத்தில் மண்டபம் கட்டும் திருப்பணியை நிலத்தம்பிரான் துவக்கி னார். திருப்பணிகள் நடக்கும்போது தம்பி ரான் ஊர் ஊராகச் சென்று, மக்களது குறைகளைத் தன் ஆன்மிக சக்தியால் தீர்த்து வைப்பார். அதன் மூலம் கிடைத்த தொகையுடன் கட்டடப் பணியாட்களுக் குக் கூலி கொடுக்கக் குறிப்பிட்ட நாளன்று சென்னிமலைக்கு வந்து விடுவார். அவர் கூலி கொடுக்கும் முறை அலாதியானது. பொரி மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டி, கடலையை கலக்குவது போல, பணத்தை பொரி யுடன் கலக்கி, தன் இரு கைகளால் அள்ளிப் போடுவார். 
#அந்தப் பணத்தை #எண்ணிப் பார்த் தால் #அவரவர் செய்த #வேலைக்கான 
#கூலி__துல்லியமாக இருக்கும்.
நிலத்தம்பிரான் ஒரு நாள் இப்படி பணத்துடன் வரும்போது திருடர்கள் நான்கு பேர் அவரை மிரட்டி அவர் கையிலுள்ள பணத் தைப் பிடுங்கிக் கொண்டனர். அப்போது, ‘‘இது சென்னி #ஆண்டவரது_பணம்! இதைப் பிடுங்கிய உங்களுக்குக் #கண் தெரியாமல் #போயிடும்!’’ என்று நிலத்தம்பிரான் சாபம் கொடுத்தார். அவ்வளவுதான்! திருடர்களுக்குக் கண் தெரியவில்லை. அவர்கள் அலறி அடித்து தம்பிரான் காலில் விழுந்து, ‘‘தெரியாமல் செய்து விட்டோம்!’’ என்று #மன்றாடினர்.
‘‘நாற்பத்தெட்டு நாட்களுக்கு சென்னியாண் டவர் மலைப் படியை பெருக்கி வாருங்கள். கருணை காட்டுவார்!’’ என்றார். அவர்கள் அவ்வாறே செய்ய 48-ஆம் நாள் அவர்களுக்குப் பார்வை திரும்பக் கிடைத்தது.
மலை மேல் மண்டபம் கட்டும்போதே மலை யடிவாரத்தில் உள்ள கயிலாசநாதர் கோயிலுக்கு மதில் எழுப்பும் பணியையும் செய்தார். கதவுக்கு மரம் தேடி பொள்ளாச்சி சென்றார். அப்போது கோவையும், மலபாரும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ஆனைமலையில் ஒரு பெரிய மரத்தைப் பார்த்த நிலத்தம்பிரானும் அவர் சீடர்களும் அந்த மரத்தை வெட்ட ஆரம்பித்தனர்.
அப்போது, அங்கே வந்த வெள்ளைக்காரத் துரை, ‘‘யாரைக் கேட்டு மரத்தை வெட்டு கிறாய்?’’ என்று ஆங்கிலத்தில் அதட்டினார். அவரிடம், ‘‘சென்னியாண்டவன் #வெட்டச்_சொன்னார், #வெட்டுகிறேன்!’’ என்று ஆங்கிலத் திலேயே பதில் சொல்லி, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் நிலத்தம்பிரான்.
‘‘மரத்தை வெட்டறதுமில்லாம, திமிராவா பேசறே? இவனை மரத்திலே கட்டி வையுங்கடா!’’ என்று துரை உத்தரவு போட்டார்.
‘‘துரை... என்னைக் கட்டிப் போடறது இருக் கட்டும். உம் பொண்டாட்டிக்குப் பைத்தியம் புடுச்சி, கொள்ளிக் கட்டையை எடுத்துக்கிட்டு, ஊட்டைக் கொளுத்தப் போறேன்னு சுத்திச் சுத்தி வர்றா. அவளைப் போயி முதல்லே கட்டிப் போடு!’’ என்று தம்பிரான் சொன்னார்.
அப்போது துரையின் வேலையாள் வேகமாக ஓடிவந்து, நிலத்தம்பிரான் சொன்ன தகவலை ஊர்ஜிதம் செய்தார். துரை உடனே வீட்டுக்குக் கிளம்பினார். வேலைக்காரப் பெண்கள் துரையின் மனைவியை அமுக்கிப் பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவளுக்கு முன்னால் வந்து நின்ற தம்பிரான், தன்னிடமுள்ள விபூதியை எடுத்து அவள் தலையில் மூன்று முறை போட்டுவிட்டு, ‘‘சென்னியாண்டவா, இந்தக் குழந்தையைப் காப்பாத்து!’’ என வேண்டினார். என்னே ஆச்சரி யம்! அடுத்த கணமே துரையின் மனைவி, பழைய நிலைக்கு வந்தாள். இதைக் கண்டு வியந்து போன துரையும் அவர் மனைவியும், தம்பிரான் காலில் விழுந்து வணங்கினார். அடுத்த கட்டமாக, துரையே தன் ஆட்களைக் கொண்டு, அந்த மரத்தை வெட்டி சென்னிமலைக்கு அனுப்பி, தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சென்னிமலை அடிவாரத்தில் கயிலாசநாதர் ஆலயத்தில் இப்போதும் இருக்கும் அந்த முன் கதவுதான் அது. ஒரே மரத்தால் செய்யப்பட்டது.
கோயில் வேலைகளை விரைந்து முடித்த தம்பிரான் கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்தார்.
கும்பாபிஷேகத்துக்கு முதல் நாள் நிலத்தம்பிரான் கோயிலின் வேலைகளைப் பார்வையிட்டார். அப்போது மண்டபத் தூண் அருகில் நின்றிருந்த சிற்பி ஒருவர், தூணிலுள்ள சிற்பம் ஒன்றை நிலத்தம்பிரானிடம் சுட்டிக் காட்டினார். அதைப் பார்த்த தம்பிரான் கலகலவெனச் சிரித்தார். நிலத்தம்பிரானது சிலையை சிற்பி தத்ரூபமாகச் செதுக்கியிருந்தான்.
தம்பிரான், சென்னியாண்டவன் பக்கம் திரும்பி, ‘‘சென்னியாண்டவா... உன் திருவடியை அடையும் நேரம் நெருங்கி விட்டதைச் சிற்பியின் மூலம் உணர்த்துகிறாயா?’’ என்று கேட்டார். பிறகு, ‘கற்பூசாரி வந்து விட்டான். இனி இந்த தோல் பூசாரிக்கு இங்கு வேலை இல்லை!’ என்று தீர்மானித்து, சென்னிமலை அடிவாரத்தில் தனக் காக அமைத்த சமாதியில் போய் அமர்ந்தார். அந்த நிலையிலேயே 15-ஆம் நாள் சமாதியானார்.
மலைப்படி அருகே செங்கத்துறை பூசாரியார் மடம் ஒன்று இருக்கிறது. அங்கு அவர் சமாதிக்கு மேலே முருக விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து, சிறு கோயில் கட்டி பக்தர்கள் வழிபடுகின்றனர். மகா மண்டபத் தூணில் நிலத் தம்பிரானது சிலை இன்றும் உள்ளது. நிலத்தம்பிரான், சென்னியாண்டவனுக்குக் கோயில் கட்டுவதற்கு முன்னால், நான்கு கால் மண்டபத்தில் நின்ற கோலத்துடன் ஆண்டவர் காட்சி தந்தார். அருகில் உள்ள ஊரிலிருந்து சிவாச்சார்யார் ஒருவர் வந்து பூஜை செய்து, வில்வ மரப் பாலால் ஆண்டவன் நெற்றியில் பொட்டு வைப்பார். ஒரு நாள் சிவாச்சார்யார் வராததால் நிலத் தம்பிரானே பூஜை செய்தார். அப்போது குள்ளமான தம்பிரானுக்கு ஆண்டவர் நெற்றி எட்டாததால், ஆண்டவர் தலையைக் கொஞ்சம் தாழ்த்தினாராம். அதனால் இன்றும் சென்னியாண்டவரின் தலை தாழ்ந்தபடியே இருக்கிறதாம்!
ஈரோட்டில் இருந்து பெருந்துறை வழியாகவும், வெள்ளோடு வழியாகவும் செல்லலாம். பெருந்துறையில் இருந்து 14 கி.மீ. தொலைவில் சென்னிமலை அமைந்துள்ளது. மலைக்கு மேல் செல்ல வாகன வசதிகள் உண்டு.
செங்கத்துறை அய்யன், வேட்டுவம்பாளையத்து அய்யன் என முருகனருள் பெற்ற பல குடியானவர்கள் சென்னியாண்டவர் கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகளும் அருட்பணிகளும் செய்துள்ளனர்.

Tuesday, March 26, 2019


திருவண்ணாமலை கிரிவல ரகசியம்
*****************************************
  
 எங்காவது துவங்கி,எப்படியாவது முடிக்ககூடாது.மலையை சுற்றி 14 கி.மீ.
பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும்வாகனங்களில் செல்லுதல் கூடாது..இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும்.

மலைசுற்றும் போது கைகளை வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடக்க
கூடாது. சாதாரணமாக நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டு நடந்து செல்லவேண்டும்.

இந்த மலையை அங்கப்பிரதட்சணம் செய்த காலங்களும் உண்டு. இப்போதும் பலரும் அங்கப்பிரதட்சணம் செய்வதுண்டு.

அது சாத்தியமில்லாது போது நடந்து சென்றாலே போதும். எல்லா மாதங்களும் கிரி வலத்திற்கு ஏற்ற மாதங்களான போதும் 
ஐப்பசி,கார்த்திகை, மார்கழி, பெளர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற
காலங்களும்,மாதங்களும். மலை வலம் வரும்போது அருணாசலேஸ்வரின்
கிழக்கு கோபுரத்தில் துவக்கி முடிக்கும் போது அருணாசலேஸ்வரரை வணங்கினால் தான் மலைவலம் முடித்ததாக அர்த்தம்.

அருணாசலேஸ்வரரின் கிழக்கு வாயிலில் இருந்து மலை வலம் வர ஆரம்பிக்க வேண்டும்மலையின் எட்டு திசைகளிலும் தன் பாவங்களை போக்குவதற்காக அஷ்டதிக்கு பாலகர்களில் கிழக்கு அதிபதியான இந்திரன்
வழிபட்ட இந்திரலிங்கத்தை வழிபடவேண்டும்பிறகு மலை சுற்றும் சாலையில் நந்திகேசுவரர் சன்னதி உண்டு.

இங்கு வணங்கி வழிபட்டு தான் மலைவலம் வரவேண்டும். ஏனெனில் மலை சுற்றுகையில் நமக்கு சிவன் அளித்த அதிகார மூர்த்தி அவர்.

அடுத்து தென்கிழக்கு திசைக்கு அதிபதி அக்னி பூஜை செய்த அக்னி லிங்கம் உள்ளது. இதன் அருகில் சிம்ம தீர்த்தம் உள்ளதுஇந்த தீர்த்தத்தின் கரையில் அரிச்சந்திர மகாராஜாவின் சிலை ஒன்றும் உள்ளதுஅதன் வழியே சென்றால் பிருங்கி மகரிஷி முனிவரின் வழிபாட்டு தலம் உள்ளது.

அடுத்து தெற்கு திசைக்கு அதிபதி எமன் பூஜை செய்து வழிப்பட்ட எமலிங்கம் உள்ளதுஎமன் கட்டளை நிறைவேற்றும் கின்னர் முதலானோர் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லுகின்றனர் என்ற ஐதீகம் உள்ளது.இங்கு தியானம் செய்தால் நம்மிடையே உள்ள தீய எண்ணங்கள் மறையும் நினைக்கின்ற செயல்கள் நிறைவேறும்.

அடுத்து மகாசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது.இந்த கோயிலில் மஞ்சள் கயிற்றில் தொட்டில் செய்து அங்குள்ள மரத்தில் தொங்குவதை காணலாம்.இந்த மரத்தில் அங்ஙனம் கட்டினால் குழந்தை வரம் அளிப்பதாக கூறப்படுகிறது.

தென்மேற்கு திசைக்கு அதிபதியான நிருதி சிவனை வழிப்பட்ட நிருதி லிங்கம் உள்ளது.

இங்கு வணங்கிய பின்பு தெற்கிலிருந்து மேற்கில் திரும்பும் வளைவில் நின்று
மலையை பார்க்க வேண்டும்.இந்த இடம் பார்வதி தேவிக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான காட்சி அளித்த இடம். ஆதலால் இங்கு மலையின் முகப்பில் நந்தியின் தலை திரும்பி நம்மை பார்ப்பது போல் இருக்கும். அதை வணங்கி செல்ல வேண்டும்.

அடுத்து அருணாசலேஸ்வரின் கோயிலுக்கு நேர் எதிரில் திருநேர் அண்ணாமலை கோயில் உண்டு.இங்கு உண்ணாமுலை அம்மன் தீர்த்தம் அருகிலேயே உள்ளது. ஆஞ்சனேயர் சன்னதி, ராகவேந்திரா லயம்,முருகன் லயம் உள்ளது.இங்குள்ள முருகன் சிலை பழநி மலை சித்தர் போகரால் நிர்மாணிக்கப்பட்டது.

பழநியில் நவபாஷாண சிலை அமைத்த போகர் இங்கு மூலிகைகளால் சிலை அமைத்தார். (இந்த சிலை நவாப்புகள் காலத்தில் திருட்டு போய்விட்டது)

அடுத்து இராஜராஜேஸ்வரி ஆலயம் புதுப்பித்து புத்தொளியுடன் இருக்கிறது.
 இராஜராஜேஸ்வரி ஆலயத்திற்கு நேர் எதிரில் மலை அடிவாரத்தில் கண்ணப்பர் கோயில் அமைதியான சூழ்நிலையில் குளிர் மரங்களுக்கு இடையில் இருக்கிறது.

தியானத்திற்கு ஏற்ற இடம்.சாதுக்களும்ஆங்கிலேயரும் இங்கு தியானத்தில்
அமர்ந்திருப்பதைக் காணலாம்.

இராஜராஜேஸ்வரி ஆலயம் அடுத்து, கவுதம மகரிஷி கோயில் இருக்கிறது. கவுதம மகரிஷி இங்கு வந்து வழிபாடும், நிஷ்டையிலும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

அடுத்து சூரியன் வழிபட்ட லிங்கம். மேற்கு திசைக்கு அதிபரான வருணன் வழிபட்ட லிங்கம் உள்ளது.

அதன் பிறகு பிரம்மன் வழிபாடு செய்து பாவங்களை போக்கி கொண்ட திரு
அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை அடி அண்ணாமலையார் என்று அழைப்பர்.அருகில் மாணிக்க வாசகர் கோயில் உள்ளது. அகஸ்தியர் குளம் உள்ளது.

அதற்கடுத்து வடமேற்கு திசைக்கு அதிபதியான வாயு லிங்கம் உள்ளது. சிறிது
தூரம் சென்றால் வட திசைக்கு அதிபதியான குபேரன் வழிபட்ட குபேரன் லிங்கம் உண்டு.

அடுத்து இடுக்கி பிள்ளையார் கோயில் உள்ளது.இதனை கோயில் என்று சொல்லுவதை விட சுளுக்கும்,உடல் வலி தீர்க்கும் இடம் எனலாம்.

முன்காலத்தில் கடவுளின் பெயரை கூறி பக்தியும், ஒழுக்கத்தினை வளர்த்தார்கள். அதே போல் இதுவும் ஒன்று.இந்த கோயிலில் நுழைத்து ஒருக்களித்து வெளியே வரவேண்டும். ஒரு அடி அகலத்தில் உடம்பை ஒருகளித்த படி வரவேண்டும்.அப்படி இல்லை என்றால் உடம்பு சிக்கி கொள்ளும். அதிலிருந்து விடுபடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.. அப்போது உடம்பில் ஏதாவது சுளுக்கு,வலி இருந்தால் விலகிவிடும்.

ஆனால், உடம்பு மாட்டிக் கொள்ளாமல் வெளியே வரவேண்டும் என்ற் எண்ணத்தில் அங்குள்ள பிள்ளையாரை தரிசிக்க எண்ணம் வருவதில்லை. அதனால் தான் பஞ்சபூதங்களையும் அடக்கினால் தான் வாழ்வில் உயர்வடைய முடியும் என்ற ஒப்பற்ற தத்துவத்தை இடுக்கு பிள்ளையார் காட்டுகிறார்.

இங்கிருந்து மலையை பார்த்தால் ஐந்து முகங்கள் தெரியும்.இது சிவனின் ஐந்து திருமுகங்களை குறிக்கக்கூடியது.அடுத்து மலை வல பாதையில் இருந்து சுடுகாட்டுக்கு பிரியும் தனிப் பாதையில் சென்றால் வட கிழக்கு அதிபாரான ஈசானன் வழிபட்ட ஈசான லிங்கம் உள்ளது.

 இதனையும் வழிபட்டு அதன் பிறகு அருணாசலேஸ்வரர் கோயில் சென்று தரிசித்த பிறகுதான் மலைவலம் பூர்ணத்துவம் அடைகிறது.

எல்லா தீர்த்தங்களிலும் ஒவ்வொரு சிறப்பு உண்டு என்றாலும்,துர்கையம்மன் கோயிலுக்குள் கட்க தீர்த்தம் மிகச்சிறந்த தீர்த்தமாக போற்றப்படுகிறது.

மகிடாசுரனை வதம் செய்த பார்வதிதேவியின் பாபம் போக்குவதற்கு துர்க்கையம்மன் வாள் (கட்கம் என்றால் வாள்) வீசி தோற்றுவித்தது.

மலை வலம்.
*****

மலை வலம் வர சிறந்த, சிறப்பான நாள்

புராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் விழா எடுத்து மலையை வலம் வந்தார்.அப்போதுதான் சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு. சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர்.

அதன் பின்னர் பெளர்ணமி அன்று மலைவலம் வர ஆரம்பித்தார்கள்.

சந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன். அன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் பெற்று பூர்ண நிலவாக சந்திரன் நிறைந்த உயிர்களை தருகிறார்.இதனால் பெளர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது.

மனோன்மணியான சக்தி சிவனுடன் இரண்டற கலக்கும் இந்த நாளில் வழிபடும் பக்தர்களுக்கு விசேஷ சக்திகளை வழங்குகிறது என முனிவர்கள் கூறுகின்றனர்.

இதை விஞ்ஞானமும் உறுதிபடுத்துகிறதுஇதை விட அதிசூட்சம் நாளாக வியாதீபாத யோக நாள் அன்று மலை வலம் வந்தால் நினைத்த காரியம் சித்தி அடையும் என்று கோயில் குருக்கள் கூறுகின்றனர்.

செவ்வாய் சிறப்பு.
*******

சிவன் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமையாக இருக்கும்ஆனால், திருஅண்ணாமலை அக்னி மலை.இதனால் தான் அருணாசலம் என்ற பெயரும் உண்டு. அருணம் என்றால் சிவப்பு என்று பொருள்.இந்த கோயில் அக்னி கோயில்.அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை.

அக்னிக்குரிய கிரகம் அங்காரன். ஆகவே இந்த கோயிலில் மட்டுமே சிவ பெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று விசேஷ வழிபாடு நடக்கும். அதுபோலவே செவ்வாய்க்கிழமை அன்று வழிபடுவோர் பிறவி பிணியிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகிறது.

மலை வலத்தினால் கிடைக்கும் நன்மைகள்.
****************

ஆயுளைக்கூட்டும் ஆற்றல் கொண்டது திருக்கடையூர். சனித்தொல்லையில் இருந்து விடுப்பது திருநள்ளாறு.நோய்களில் இருந்து நம்மை காப்பது வைத்தீஸ்வரன் கோயில்.அது போல் ஊழ்வினைகளை நீக்கக்கூடியது அண்ணாமலையார் கோயில்.

பிறவிப்பிணி நீங்க வேண்டும் என விரும்பும் எவரும் மலை வலம் வருவதால் தத்தம் கர்மாவை குறைத்து கொள்ள முடியும்.

அண்ணாமலையை சுற்றி வருவது சம்சாரக்கடலை கடக்கும் தெப்பமாக அமையும்.அதுபோல் ஏழு நகரங்களையும் கடந்து முக்தி அடையும் ஏணியம்மன் கோயிலுக்குள் கட்க தீர்த்தம் மிகச்சிறந்த தீர்த்தமாக போற்றப்படுகிறது.

 மகிடாசுரனை வதம் செய்த பார்வதி தேவியின் பாபம் போக்குவதற்கு துர்க்கையம்மன் வாள் வீசி தோற்றுவித்தது.

மலை சுற்றி வரவேண்டும் என நினைத்து ஓரடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும்.

இரண்டாம் அடி எடுத்து வைத்தால் ராஜிய யாகம் செய்த பலன் கிடைக்கும்.

மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

நான்காவது அடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களும் பலன் கிடைக்கும்.

நினைப்பவர்களுக்கே இந்த பலன் என்றால் மலை சுற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன் கைலாசத்திற்குள், நுழைந்து பிறப்பு இறப்பாகிய பிணி நீங்கி உயர் பதவி கிடைக்கபெறுவார்கள் என்று அருணாசல புராணம் தெரிவிக்கிறது.

நம்பிக்கைதான் வாழ்க்கை. இன்று படுக்கும் போது நாளை காலையில் எழுந்து விடுவோம் என்ற திட நம்பிக்கையில்தான் துயில் கொள்கிறோம்.

 நம்பிக்கைதான் நமது உயிர் மூச்சு. நம்பிக்கையால்தான் எல்லாவற்றையும்
சாதிக்கிறோம்.நம்பிக்கை இல்லாதவர் இந்த உலகில் வெற்றி பெற முடியாது.
எனவே பூரணமான நம்பிக்கையோடு தொடங்குங்கள். மலையை சுற்றும் போது சிவலிங்கம், சிவன்,சிவம் என்ற எண்ணத்தோடு வலம் வர தொடங்கினால், நீங்கள் நினைத்த எண்ணங்கள் கண்டிப்பாக நிறைவேறும்.

ஞாயிற்று கிழமை சுற்றினால் சிவபதவி கிடைக்கும்.

திங்கள் கிழமை சுற்றினால் இந்திர பதவி கிடைக்கும்.

செவ்வாய் கிழமை சுற்றினால் கடன்,வறுமை நீங்கும்தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளை நீக்கி சுபிட்சும் பெறலாம்.

புதன்கிழமை சுற்றினால் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் கிடைக்கும்.

வியாழக்கிழமை சுற்றினால் ஞானிகளுக்கு ஒப்பான நிலையை அடையலாம்.

வெள்ளிக்கிழமை சுற்றினால் விஷ்ணு பதம் அடையலாம்..

சனிக்கிழமை சுற்றினால் நவக்கிரகங்களை வழிப்பட்டதன் பயன் கிடைக்கும்.

நாற்பத்தெட்டு நாட்கள் அதிகாலையில் கணவனும்,மனைவியும் நீராடி மலைவலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும்.

அமாவாசை அன்று சுற்றினால் மனதில் உள்ள கவலைகள் போகும்மனம் நிம்மதி அடையும்.

மலை வலம் வரும் போது பக்தர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அருணாசல புராணத்தில் பிரம்மன் தெரிவிக்கிறார்.

மலை வலம் வரும் பக்தர்கள் அன்றைக்கு பெண்களை நினையாமலும், அவர்களோடு சேராமலும், நீரில் மூழ்கி, தூய்மையான ஆடையை உடுத்திகொண்டு விபூதி அணிந்து,தானம் தாம் கொடுத்து ஒருவரிடத்தும் தானம் வாங்காமல் காலினால் நடந்து வரவேண்டும்.

மலையை சுற்றி இருக்கின்ற தேவர்களையும் முனிவர்களையும் வணங்கி சட்டையும்,போர்வையும் நீக்கி குடை பிடியாமல்,செருப்பு அணிப்பணியாமல்,பயம், கோபம், சோகம்இவற்றை நீக்கி குதிரை,யானை இவற்றின் மீது ஏறாமல் தாம்பூலம் தரிக்காமல், சிந்தையை சிவன்பால் செலுத்தி வலம் வரவேண்டும்.

கையை வீசிக்கொண்டு போகாமலும், மனச் சோர்வில்லாமல்ஆர்வத்தோடு கைகளை தலை மேல் குவித்து கொண்டு, உடல் உறுப்பு ஊனம் உற்றவர்களையும் பாராமல்,தீயவர்களை கண் எடுத்தும் பாராமல் நடத்தல் வேண்டும். மலை சுற்றப்போகும் பக்தர்களை பரிசோதிக்க நினைப்பது இறைவனின் தினசரி விளையாட்டுஎனவே இச்சோதனைகளை வென்று மலை வலம் வரவேண்டும்.

மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது!
-------------------------------------------------------------------------------------------

திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக்கூடாது. அதற்கு புராணம் கூறும் காரணம் இது:

மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோஇரவிலோ சாகாத வரம் பெற்ற இரணியன் மேலும் வரம்பெறும் பொருட்டு மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான்.

 அவன் தவம் புரியும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு புனிதத்
தலமாகத் தேடினாள் லீலாவதி.

அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்து நாரதர், "திருவண்ணாமலை திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் உனக்கு நல்வழி கிட்டும்!' என்று கூறி, காயத்ரி மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்அதன்படி திருவண்ணாமலையில் காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி அவள் கிரிவலம்
வருகையில், திடீரென்று அமுத புஷ்பமழை
பொழியத் தொடங்கியது.  பூமியில் நடக்கும் அக்கிரமச் செயல்கள் அனைத் தையும் பூமாதேவி மிக்க பொறுமையுடன் தாங்குகிறாள். அப்படிப்பட்ட பூமாதேவியைச் சாந்தப்படுத்த இப்படிப்பட்ட மழை பொழியுமாம். இந்த மழைப்பொழிவு இறைத்தன்மையுடையது. ஒரு கோடி மழைத் துளிகளுக்குப்பின் அமுதத் துளி ஒன்று கீழே இறங் கும். இந்தத் துளி எங்கு விழுகிறதோஅங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர்விவசாயம் செழித்து வளரும். அமைதி நிலவும். அது மட்டுமின்றி, அங்கு "அமுத புஷ்பமூலிகை' என்கிற அரிய வகை தாவரம் தோன்றும்.

மழைத் துளிகள் கனமாக விழவே, பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதிஎனினும், விடாமல் காயத்ரி மந்திரம்  ஜெபித்தாள். அப்போது, விழுந்த அமுதத் துளி பாறையில் பட்டு, அதில் அணுவளவு அவளின் கர்ப்பப் பையையும் அடைந்தது. அதைக் கருவிலிருக்கும் பிரகலாதன் உண்டான். அந்தப் பாறையில் அமுத புஷ்ப மூலிகை தோன்றியது.

அப்போது கிரிவலம் வந்த சித்தர் பெருமக்கள் இந்தக் காட்சியைக் கண்டனர். உரிய மந்திரம் சொல்லி, அந்த மூலிகையைப் பறித்த சித்தர்கள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் லீலாவதியிடம் ஆசி கூறி கொடுத்தார்கள்.

அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்க இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.

அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள் லீலாவதி. அதனால் அந்த மூலிகையின் சக்தி கருவை அடைந்ததுஅதுதான் பின்னாளில் ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்கும் சக்தியை பிரகலாதனுக்கு வழங்கியது.

மழையும் வெயிலும் சேர்ந்து வரும்போது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் துதிகளை ஜெபித்தால் நமது வீட்டில் செல்வமழை பொழியுமாம்.

மழை பொழியாவிட்டாலும் மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் நற்பலன்கள் ஏற்படும். தகுந்த குருவிடம் மந்திர உபதேசம் பெற்றே காயத்ரியை ஜெபிக்க வேண்டும் என்பது விதி.

சாபங்கள் நீங்கிட உதவும் அன்னதானமும் ஓம்சிவசிவஓம் மந்திரஜபமும்!!!
--------------------------------------------------------------------------------------------

அண்ணாமலையில் நாம் எந்த நாளிலும்,எந்த நேரத்திலும்,எந்த சூழ்நிலையிலும் அண்ணாமலை செல்லலாம்;அப்படி நாம் செல்லும்போது, நம்முடன் நமது முந்தைய மனிதப்பிறவிகளும் நம்முடன் கிரிவலம் வரும்=
இந்த தெய்வீக உண்மையை நமக்குக் கண்டறிந்து சொன்னவர் சித்தர்களின் தலைவர்
அகத்தியர் ஆவார்.

அகத்தியரின் இந்த தெய்வ வாக்கினை தொகுத்து ஸ்ரீஅகஸ்திய விஜயம் என்னும் மாத இதழ் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.

அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செல்லும்போது,இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டுமனதுக்குள் ஓம்சிவசிவஓம் என்று ஜபித்துக்கொண்டே செல்ல வேண்டும்.

அவ்வாறு கிரிவலம் செல்லும்போது,ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் ஒருவருக்கு மட்டுமாவது அன்னதானம் செய்ய வேண்டும்.

வசதியிருந்தால் குறைந்தது ஒன்பது பேர்களுக்கு அன்னதானம் செய்யலாம்;

இவ்வாறு 14 கிலோ மீட்டர் தூரத்தையும் கடந்தால் அதனால் நமது கடுமையான கர்மவினைகள் தீரும்.

கிரிவலம் முடித்த பின்னர்,கட்டாயமாக அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வேண்டும்.( கிரிவலம் புறப்படும்போது, அண்ணாமலையாரை
கோயிலுக்குள் சென்று தரிசிக்க வேண்டியதில்லை)

(நள்ளிரவில் கிரிவலம் முடித்தவர்கள்,மறு நாள் காலையில் அண்ணாமலையாரை தரிசிக்கவேண்டும்)

இப்படி மாதம் ஒருமுறை வீதம் குறைந்ததுஆண்டு வரையிலும்,அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரையிலும் அண்ணாமலையில் அன்னதானம் செய்து கொண்டே கிரிவலம் செல்ல வேண்டும்;அப்படி கிரிவலம் செல்லும்போது ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இவ்வாறு செய்ததன் மூலமாக எனக்கு பலவிதமான பிரச்னைகள் முழுமையாக தீர்ந்திருக்கின்றன;

(குறிப்பாக அன்னதானத்துடன் கூடிய கிரிவலம் செல்வதை ஒரு தமிழ் வருடத்தில் மூன்று அமாவாசைகளில் செய்வதை வழக்கமாக்கியிருக்கிறேன். ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை இந்த மூன்று அமாவாசைகளுமே அதி முக்கியத்துவம் வாய்ந்தவைமுன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்ய கடலோரம் அல்லது நதிக்கரையோரம் செல்ல வேண்டும் என்பது இந்து சாஸ்திர விதியாக இருக்கிறது.

அண்ணாமலையானது சோண நதியின் மீது அமைந்திருக்கிறதே! எல்லாம்
எனது அப்பா அருணாச்சலத்தின் ஆசிர்வாதத்தால் இவ்வாறு செய்ய
முடிந்திருக்கிறது. நீங்களும் இவ்வாறு செய்து பார்க்கலாமே!!!)

இதை படித்த பிறகு நீங்கள் எங்கிருந்தாலும் சரி... ஒரே ஒரு சங்கல்பம் எடுங்கள் இந்த வினாடி... அண்ணாமலையை நாம் இறப்பதற்குள் ஒரு தடவையாவது கிரிவலம் வர வேண்டும் என்று.... அண்ணாமலயானிடம் கேளுங்கள்.... அவன் உங்களை அழைப்பான்....


+++++++++++++++++++++++++

திருக்கண்டியூர்

*🔯திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்.* *🔯ஸரீ கமலவல்லி நாச்சியார் ஸமேத ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் {ஸ்ரீ கமலநாதப் பெருமாள்...